தோஷங்கள் போக்கும் பரிகாரம்....!!!அனைத்துத் தோஷங்களுக்கும் பொருந்தக்கூடிய
ஒரு விசேஷமான வழிமுறையை கொண்ட தோஷ பரிகாரங்கள்:
ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ, அல்லது அவரவரது ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ மாலையில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். 27 செவ்வாய்க்கிழமைகள் கணக்கு. அவ்வாறு 27 செவ்வாய்க்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு அதை சுப்பிரமணியரின் திருவுருவத்தின் முன்பு வைத்து, அவரது மந்திரங்களில் ஏதாவது ஒன்றை 108 முறை உச்சாடனம் செய்து, தூப தீப ஆராதனைகளுக்குப் பிறகு அந்தப் பசும் பாலை அவர்கள் மட்டும் அருந்திப் பூஜையை நிறைவு செய்யலாம். அன்று இரவு மட்டும் பால், பழம் அருந்தி விரதமிருக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.வியாழக்கிழமைகளில் செய்து வந்தால் பரிபூரண பலன் கிடைக்கும்...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக