| திருநாவுக்கரசர் |
E
|
சமணம் சென்று சைவம் மீண்ட போது திருநாவுக்கரசர் பாடிய
முதல் திருப்பதிகம் ‘கூற்றாயினவாறு’ என்று தொடங்குவது. |
பல்லவ வேந்தன் அழைப்பை மறுத்துப்
பாடியது ‘நாமார்க்கும் குடியல்லோம்’ என்று அமைந்தது. அப்பூதி அடிகளின் மகனை உயிர் பெறச் செய்தது; திருவீழிமிழலையில் படிக்காசு, பெற்றது; திருமறைக் காட்டில் மறைக்கதவம் திறந்தது; கயிலைக் காட்சியைத் திருவையாற்றில் கண்டு மகிழ்ந்தது; |
திருப்புகலுரில் இறைவன் திருவடிகளில் ஒரு சித்திரைச்
சதயநாளில் கலந்தருளியது என்பன இவரது வரலாற்றில் குறிக்கத்தக்க நிகழ்வுகள். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரோடு ஒரே காலத்தில் வாழ்ந்தவர். இவர் காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதி. 3.3.1 நான்காம் திருமுறை திருநாவுக்கரசர் அருளியனவாக இன்று கிடைத்துள்ள பதிகங்கள் 312. தேவாரப்பாடல்களின் எண்ணிக்கை 3066. திருநாவுக்கரசரின் நான்காம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகங்களைத் திருநேரிசை என்றும் குறிப்பர். இத்திருமுறையுள் இடம் பெற்றுள்ள பதிகங்கள் 113. பாடல்கள் 1070. நான்காம் திருமுறையுள் 50 சிவத்தலங்களுக்கு உரிய பதிகங்கள் இடம் பெற்றுள்ளன. கொல்லி (1) திருநேரிசை (58) திருவிருத்தம் (34) (இவ்விருவகைப் பாடல்களும் (62) கொல்லிப்பண்ணில் சேர்க்கப்பட்டுள்ளன) 3. காந்தாரம்(6) 4. பியந்தைக்காந்தாரம் (1) 5.சாதாரி (1) 6. காந்தார பஞ்சமம் (21). பழந்தக்கராகம் (2) 8.பழம் பஞ்சுரம் (21) 9. சீகாமரம் (2) 10. குறிஞ்சி (1) என நான்காம் திருமுறையுள் 10 பண்கள் இடம் பெற்றள்ளன. இத்திருமுறையில் அற்புதத் திருப்பதிகங்கள் ஒன்பது இடம் பெற்றுள்ளன. சைவப் பெருமக்களால் பெரிதும் போற்றப்படும் இத்திருப்பதிகங்கள் குறித்த விளக்கங்களைக் கீழே உள்ள அட்டவணை விளக்கி நிற்கிறது. |
அற்புதப்பதிகம்
|
தலம்
|
தலம்
| |
1
|
சூலை நோய் நீக்கியது
|
திருவதிகை
|
கூற்றாயினவாறு
|
| 2 | நீற்றறையில் பிழைத்தது |
திருப்பாதிரிப்புலியூர்
|
மாசில் வீணை
|
| 3 | யானை இடறவந்த போது பாடியது |
திருப்பாதிரிப்புலியூர்
|
சுண்ணாவெண்
êï¢îù |
| 4 | கல் மிதக்கப் பாடியது |
திருப்பாதிரிப்புலியூர்
|
சொற்றுணை
வேதியன் |
| 5 | மறைக்கதவம் திறப்பித்தது |
திருமறைக்காடு
|
பண்ணின்
நேர்மொழி |
| 6 | அப்பூதி மகனை உயிர்ப் பித்தது |
திங்களூர்
|
ஒன்றுகொலாம்
|
| 7 | சூல-இடபக் குறிகாளைப் பெற்றது (தோள்மீது சிவபெருமானுக்கு உரிய சூலம் மற்றும் இடபத்தின் வடிவத்தைப் பொறித்தல்) |
திருத்தூங்கானை
மாடம் |
பொன்னார்
திருவடிக்கு |
| 8 | திருவடிசூட்டப் பெற்றது |
திருநல்லூர்
|
நினைந்து
உருகும் |
| 9 | கயிலைக்காட்சி கண்டது |
திருவையாறு
|
மாதர் பிறைக்
கண்ணி |
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக