3. அம்பிகை அந்தாதி:
10. உணர்வகமாய் பலநலமாய் உறுதிநிற்கும் இமையவள்!
பராபரையாய் பகுத்தளித்த பராசக்தியைப்
பரிந்துவக்கப் பகிருதலும்
பராமரித்துப் பிறர்களிக்கப் பண்ணுதலும்
பரானுபவப் பரமானந்தத்
தராதரமாய் துய்ப்பதிலும் துன்பமதைத்
துடைப்பதிலும் ஐம்புலத்துச்
சராசரமாய் உள்ளமதாய்ச் சலனிப்பதும்
சுவாசிப்பதுவும் கடவுளுறையே!
(பராபரை = சிவசக்தி; பகுத்தளித்த = பிரித்து வழங்கிய; பராசக்தி = சிவ ஆற்றல், பேராற்றல்; பரிந்துவக்க = பரிந்து + உவக்க; பரிந்து = இரங்கி; உவக்க = விரும்பி, மகிழ்ந்து; பகிருதல் = சேர்ந்து பங்கிட்டுக் கொள்ளுதல்; பராமரி = ஆதரி, பேணு, கா, கருது, ஆராய்; பிறர்களிக்க = பிறர் + களிக்க; களி = மகிழ்வடை; பரானுபவம் = பேரனுபவம்; பரமானந்தம் = பேரின்பம்; தராதரம் = பகுப்பு மதிப்பீடு, மலை, மேன்மை; துய்ப்பு = நுகர்ச்சி, அனுபவித்தல்; துடைத்தல் = நீக்குதல், போக்குதல்; ஐம்புலத்து = ஐந்து புலன்கள் வழி; சராசரம் = இயலுலகு, பிரபஞ்சம்; உள்ளம் = இருதயம்; சலனிப்பது = அசைதல், இயங்குவது, துடிப்பது; சுவாசிப்பது = மூச்சுவிடுதல்; உறை = வாழ்நாள், மருந்து, உணவு, உறுதியாக இரு, வாழ், தங்கு; )
பரம்பொருள் சிவசக்தியாகப் பகிர்ந்து வழங்கிய சிவப் பேராற்றலை கருணை மிகுக்க இரங்கி, மகிழ்வோடு பிறர்பால் பங்கிட்டுக் கொள்ளுதலும், அவற்றைப் பேணிக் காத்து பிறரை இன்புறச் செய்தலும், பேரனுபவப் பேரின்பத்தை உயர்வகைத் தரத்தோடு மலையென மேன்மை பொருந்த நுகர்வதிலும், இடர்ப்படும் துன்பங்களை நீக்கிப் போக்குவதிலும், கண், காது, மூக்கு, வாய், உடல் எனும் ஐம்பொறி உணர்வு வழி, இயல் உலகமாக இதயமாகத் துடிப்பொடு இயங்குவதும், சுவாசிப்பதும்; உடலுக்குள் உயிரெனும், புனித உள் உறையும் ஆன்ம சீவ சக்தியின் இருப்பே ஆகுமே அன்னைப் பராசக்தியே!
பிரக்ஞை, எழுச்சி, புலன்களின் அறிநிலை, உள்ளுணர்வு அனைத்திற்கும் தாயக மையமாக, பல்வகை நலங்களை உடலிற்கும், ஆன்மாவிற்கும் அனுபவங்களாக வழங்கி, ஆதார உறுதியோடு கண்ணிற்கு இமை போன்று காத்து இலங்குபவள் அன்னை அம்பிகையே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக