வெள்ளி, 7 மார்ச், 2014

கண்ணனவன் பதம் பணிவேன்

அரவணைமேல் துயிலுறுவோன் அமைதிமிகு
உருவத்தோன் விரிகமல உந்தியுடை
விண்ணவரின் நாயகன் விண்போலே
வியாபித்த விச்வரூபன் கார்வண்ணன்
மங்களம் சேர் அங்கத்தோன் திருமகளின் மனமீர்த்தோன்
பங்கயக்கண் படைத்தவனாம் யோகிர்தம் தியானத்தால்
மனத்துள்ளெ உணரலாகும் விஷ்ணுவையே வழிபடுவேன்
அனைத்துலகின் அதிபதி என் பிறவிபயம் போக்கிடுவான்..!
 
முகில்வண்ணன் மறுஉரத்தே தாங்கினவன் பீதகமாம்
துகிலுடையோன் கௌஸ்துபமாம் மணிஒளிரும் மார்புடையோன்
சான்றோர்கள் சூழ்ந்தி்ருப்போன் விரிகமல விழியுடையோன்
மூன்றுலகின் நாயகனாம் நாரணனை நான்பணிவேன்...!
 
சங்கும்திருச் சக்கரமும் குண்டலமும் கிரீடமுடன்
தங்கத்துகில் தரித்தவனாம் தாமரையாம் திருக்கண்ணன்
மாலையணி மணிமார்பில் கௌஸ்துபம் ஒளிவிளங்க
நால்வரைத் தோளுடைய நாரணனை நான்பணிவேன்...!
 
பாரிஜாத மரநிழலில் பொன்னிருக்கை தனிலிருக்கும்
கார்மேக வண்ணன்விரி கன்ணன்எழில் அலங்காரன்
முகம்நிலவு புயம்நான்கு ஸ்ரீவத்ஸமொடு மலர்மார்பன்
ருக்மணியும் பாமையும்சேர் கன்ணனவன் பதம்பணிவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக