வியாழன், 20 மார்ச், 2014

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015

அன்பர்களே....!!!குரு பெயர்ச்சி வாழ்த்துக்கள்!....!!!
குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015...!!!
மேஷ இராசி அன்பர்களே… !!!
உங்களுக்கு குரு பாக்கிய-விரயாதிபதி ஆவார். அவர், 19.6.2014 வியாழன் அன்று மிதுனத்தில் இருந்து கடக இராசிக்கு பிரவேசிக்கிறார். உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திற்கு செல்லும் குரு யோகத்தை வாரி வழங்க போகிறார். உங்கள் இராசிக்கு 8-ம் இடம், 10-ம் இடம், 12-ம் இடங்களை குருபார்வை செய்வதால், தடைபட்ட திருமணம் நடக்கும். தொழில் உத்தியோகம் சிறப்பாக அமையும். விரயங்கள் தவிர்க்கப்ப

பஞ்சமி திதியில் ...பஞ்சமி வழிபாடு

பஞ்சமி திதியில் ...பஞ்சமி வழிபாடு.
நாளை (21.3.14) அன்று வருகிறது.
Sivaruban Ruba Akkshayas Fotoபஞ்சமி திதியில் நாளை சக்தி தேவியை வழிபாடு செய்தால் எல்லா நன்மையும் உண்டாகும்.
அமாவாசை முடிந்த ஐந்தாம் நாள் மற்றும் பவுர்ணமி முடிந்த ஐந்தாம் நாளும் பஞ்சமி திதி வரும்.
பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்படும். திதி என்பது சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கோள்களுக்கிடையே உள்ள இடைவெளியை தூரத்தின் ஆதிக்கம் ஆகும்.
பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணை கலந்து ஐந்து முகம் கொண்ட குத்துவிளக்கில் ஐந்து திரி இட்டு தீபத்தினை ஏற்ற வேண்டும்.
அதில் தீபத்தின் ஒரு முகத்தை உற்றுப்பார்த்தபடி நாம் மனம் உருகி வேண்டினால் தீபத்தில் அம்மன் கொலுவிருக்க வந்து அமர்ந்திடுவா..!
அப்பொழுது நமது குறைகளை எல்லாம் அந்த தீபத்தை பார்த்து கூறவேண்டும் .
108 முறை ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ..!
எனகூறிய படி ஒவ்வொரு மந்திரத்திற்க்கும் ஒவ்வொரு கற்கண்டு இடவேண்டும். பூவும் குங்குமமும் அர்ச்சிக்கலாம்.. ! அத்துடன்

குரு பெயர்ச்சி பலன்கள் 2

குரு பெயர்ச்சி பலன்கள் 2014 – 2015...!!!
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும். 

கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும். தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும். ரயில், விமானம் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டும். கல்வித்துறையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழிற்சாலைகள் உருவாகும். பங்கு சந்தை லாபகரமாக நடக்க வாய்ப்புள்ளது. நவதானியங்கள் விலை குறையும். பொன் ஆபரணங்கள் விலை ஏறும். இரும்பு, எண்ணை பொருட்கள் விலை அதிகரிக்கும். கடக குருவாக இருப்பதால், உலகில் சில பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றம், வெள்ளப் பெருக்கும் ஏற்படலாம். பொதுவாக உச்ச குரு நன்மைகளை செய்வார். 
ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி புண்ணியம்” என்பார்கள். குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான். உங்கள் வீட்டின் அருகேயே இருக்கும் ஆலயத்தில், நவகிரக சந்நதியில் வீற்றிருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து வணங்கலாம். மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வணங்கினால் மலையளவு உள்ள துயரம் கடுகளவாக குறைந்து விடுவதுடன் மட்டுமல்லாமல், குரு பகவானின் பரிபூரண அருளாசியும், நன்மைகளும் தேடி வரும். துன்பங்கள் நீங்கி இன்பங்களை பெறலாம். 
இனி பன்னிரெண்டு இராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்களை குரு பகவான் தந்தருளுவார் என்பதை இப்போது நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்...!!!
2014 – 2015...!!!
திருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவானுக்கு உகந்த குரு வாரமே (வியாழக்கிழமை) குரு பெயர்ச்சியாகிறது. இதனை விசேஷமானதாகவே கருத வேண்டும்.
கடகத்தில் உச்சம் பெற்ற குரு, நன்மை செய்ய தயங்க மாட்டார். கடகத்தில் இருக்கும் குருவை, சனி 10-ம் பார்வையாக பார்ப்பதால், நாட்டு மக்களுக்கு தெய்வ பக்தி அதிகரிக்கும். ஆலயங்கள் புதுபிக்கப்படும். தொழில் கூடங்கள் நல்ல லாபகரமாக நடக்க ஏதுவாகும். மத ஒற்றுமை ஓங்கும். அன்னிய நாட்டவர் பிரச்னை அடக்கப்படும். ரயில், விமானம் போன்ற வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனத்துடன் இருக்க

வெள்ளி, 7 மார்ச், 2014

தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் ..

தர்ப்பணம், சிரார்த்தம் தகவல்கள் ..
1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.

The Hindu Diaspora within Continental Europe

image

The Hindu Diaspora within

Continental Europe

SPECIAL FEATURE
Hinduism Finds a New Home in the Old World
TWO OF OUR EDITORS FROM HAWAII AND OUR UK correspondent visited Portugal, Spain, Italy, Switzerland, France, Germany, the Netherlands, Austria and the Czech Republic last summer. Interviewing and photographing Hindus who hail from all around the globe, we sought to fill a long-standing gap in HINDUISMTODAY’S coverage of the diaspora: Continental Europe. Unlike in the United Kingdom, Sanatana Dharma’s presence in mainland Europe is still incipient and as varied as the immigrants’ origins. Here, like everywhere Hindus settle, we are preserving our rituals, culture and traditions, building temples, seeking legal recognition of our religion and confronting the perennial challenge of passing our faith on to the next generation.
image
image
image

A Religion Without Borders

பெரிய புராணம்

A07114 - பெரிய புராணம்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இப்பாடம் பன்னிரு திருமுறைகளுள் பெரிய புராணத்துக்குரிய
சிறப்பிடத்தையும் தனித்தன்மையையும் விரிவாக விளக்குகிறது.
இறைவனுக்கு நிகரான அவன் அருள்பெற்ற அடியார்களும்
சிறப்புப் பெறுவதைச் சுட்டிக் காட்டுகிறது.

பெரியபுராணம் காப்பியப் பண்புகளைப் பெற்றிருப்பதை
இப்பாடத்தில் கற்கலாம். தொகையடியார், தனியடியார்
ஆகியோரின் அறிமுகமும் இப்பாடத்தில் கிடைக்கிறது.

சைவ சமயக் கோட்பாடுகள் பெரியபுராணத்தில் இடம்
பெறுவதையும் அது ஒரு வரலாற்றுக் கருவூலமாகத்
திகழ்வதையும்     சமூக     நோக்குடைய     காப்பியமாக
விளங்குவதையும் இப்பாடம் சுட்டிக் காட்டுகிறது.

சைவ சமயத்திற்குப் பெருந்தொண்டாற்றிய மங்கையர்க்கரசியார்,
திலகவதியார், காரைக்கால் அம்மையார் போன்ற சைவ சமயப்
பெண் தொண்டர்களையும் இப்பாடம் அறிமுகம் செய்கிறது.

4.4. காப்பிய உள்ளீடு 

திருஞானசம்பந்தர்

 திருஞானசம்பந்தர்
E
தேவார மூவருள் திருஞானசம்பந்தரே முதலாமவர். இவர்
சீர்காழிப் பதியில் சிவபாத இருதயர் என்பவருக்கும் பகவதி
அம்மையாருக்கும் திருமகனாக அவதரித்தவர். அந்தணர்
குலத்தில் கவுணியர் கோத்திரத்தில் உதித்தவர். மூன்றாவது
வயதில் உமையம்மையால் ஞானப்பால் ஊட்டப்பெற்று
ஞானசம்பந்தரானவர். அக்காலை இவர் பாடிய பதிகமே
‘தோடுடைய செவியன்’ என்று தொடங்குவது. இவர்
அழுகையால் வேதநெறி தழைத்தது. சைவத்துறைகள்
விளக்கமுற்றன;

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்
E

பன்னிரு     திருமுறைகளுள்     எட்டாம்
திருமுறையாகத்     தொகுக்கப்பட்டுள்ளது
மாணிக்கவாசகரின் திருவாசகம். இவரே
இயற்றியதாகக் கருதப்படும் திருச்சிற்றம்பலக்
கோவையாரும் எட்டாம் திருமுறையாகக்
கொள்ளப்பட்டு வருகிறது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள்

சுந்தரமூர்த்தி சுவாமிகள்
E
சுவாமிகள்     திருமுறை     ஆசிரியர்களுள்
மூன்றாமவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர்
அருளிய பனுவல்கள் ஏழாம் திருமுறையாகத்
தொகுக்கப்பட்டுள்ளன. இவர் திருமுனைப்பாடி
நாட்டில், ஆதி சைவர் குலத்தில் சடையனார் -
இசைஞானி யார் அருமகவாக அவதரித்தார்.
இவர் பிள்ளைத் திருநாமம் ஆரூரர் என்பது. 

சுந்தரமூர்த்தி
திருமணநாளில்     சிவபெருமான்     புத்தூரில்     தடுத்து
ஆட்கொண்டான். இறைவன் விரும்பியவாறு திருவெண்ணெய்
நல்லூரில் ‘பித்தா பிறை சூடி’ என்று சிவபெருான் அடி எடுத்துக்
கொடுக்க இவர் பதிகப்பாமாலைகள் பாடத் தொடங்கினார்.

திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்
E
தேவார     மூவருள்     இரண்டாமவர்
திருநாவுக்கரசர்.     இவர் திருமுனைப்பாடி
நாட்டில் உள்ள திருவாமூரில் அவதரித்தார்.
வளோளர் குலத்தில் குறுக்கையர் குடியில் வந்த
புகழனார் மாதினி்யார் என்ற பெற்றோரின்
மகவாகத் திலகவதியாருக்குப் பின் வந்தவர்.
இளமைப் பெயர் மருள் நீக்கியார். சமண
சமயத்தில் தலைமை பெற்ற போது அமைந்தது
தருமசேனர் என்ற பெயர். திருவதிகையில்
சிவபெருமான் வழங்கியது நாவுக்கரசு என்பது.
திருஞானசம்பந்தர் முறையிட்டு அழைத்தது
அப்பர் என்பது.
Foto: கள்ளுண்டு வரும் மிதவின்பம் -தமிழ்க் கடலில்
எள்ளளவு எடுத்து எண்ணத்தில் ஏற்‌றி பெறும் மெய் மயக்கம் 
உள்ளத்தில் உறைந்து உருகி உடலாற் பிணைந்து பிறப்பின்பம் 
கொள்ளுவதிலும் உண்டோ சொல் ...!!!
கள்ளுண்டு வரும் மிதவின்பம் -தமிழ்க் கடலில்
எள்ளளவு எடுத்து எண்ணத்தில் ஏற்‌றி பெறும் மெய் மயக்கம்
உள்ளத்தில் உறைந்து உருகி உடலாற் பிணைந்து பிறப்பின்பம்
கொள்ளுவதிலும் உண்டோ சொல் ...!!!

மனம் எதையோ நாடுகிறது

மனம் எதையோ நாடுகிறது...? எதை என்று தான் தெரியவில்லை..?
தேவையானது எல்லாம் இருக்கிறதா என்றால் ....
எல்லாம் இருக்கிறது என்றே மனம் சொல்கிறது ....!
பின் எதை நாடுகிறாய் மனமே என்றால்... அதற்கு காரணம் நான் இல்லை நீ தான் என்கிறத...!
அந்த நான் யார்.. ..?மனமும் இல்லா நான் யார்...?
என் செய்தேன் இந்த விளையாட்டில் குழம்பி திரிய..?
நானே காரணம் என்றாலும் மனமே நீயாவது
அடங்கலாமே என்றால் முடிந்தால் செய் என்கிறது...!

பல முறை சிந்தித்து மனதிற்கு ஆடுகளம் இல்லாமல்
தியானம் செய்தால் அடங்குமா என்று பார்க்கிறேன் ....?
தியானம் செய்தேன் .. ..!
மீண்டும் விழிக்க வேண்டி உள்ளது...!
மீண்டும் அதற்கு தீனி கிடைக்கிறது.....!
மீண்டும் அதன் வேலை ஆரம்பம்...!
மீண்டும் மீண்டும் மந்திர ஜபங்கள்.. ..!
தியானங்கள்.. ..!மீண்டும் மீண்டும் விழிப்பு.. ..!
பரவெளி விழிப்பு கிட்டினாலும்.....
"இங்கே" எண்ணம் வரத்தான் செய்கிறது...!
மனதின் அடிமை ஆகிறேன்...!
என் செய்வேன் சிவனே... ?
இந்த விளையாட்டு எதற்கு..?
இந்த அனுபவங்கள் எதற்கு..?
புரியாமல் திரியும் உன் அடியேன்....!
விடுதலை தராயோ...???

காதலுக்கு தனி கடவுள்

காதலுக்கு தனி கடவுள் ...அவர் ஸ்ரீமன்மதன்

.நமது இந்து மதத்தில் காதலுக்கு தனி கடவுள் இருக்கிறார் ..!
அவர் ஸ்ரீமன்மதன் ..!
இவர் வாகனம் கிளி..!
இவரின் ஆயுதம் கரும்பால் செய்யப்பட்ட வீல், அம்பு..!
இவருக்கு இருக்கும் தனி சிறப்பு எவர் மனதிலும் காதல்
எண்ணத்தினை உருவாக்குவது.
ஓரு முறை இவர் தனது காதல் அம்பினால் சிவபெருமான்
மீது எய்தார்.பரம்பொருள் தியானத்தை கலைத்தது அதனால் சிவ பெருமான் நெற்றிகண் திறந்து மன்மதனை எரித்து சாம்பல் ஆக்கினார்.

மன்மதன் மனைவி சக்தியிடம் வேண்டி தன் கணவனை மீட்டார்
ஆனால் கணவர் அரூபமாக இருப்பார் .
ஆதலால் மன்மதன் அரூபமாக உள்ளார் .
ஆதலால் நாம் மற்ற கலச்சாரங்களை பின்பற்றுவது மூறை அல்ல.
ஜோதிடத்தில் காதல் ராசி: கன்ணி..!
அனைத்து கடவுளிடமூம் காதல் கதைகள் இருக்கிறது.
ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ மந் நாரயாணன் மீது வைத்து காதல்...!
ஸ்ரீ வள்ளியை முருகப்பெருமான் காதலித்துதான் திருமணம் செய்தார்...!
மதுரை மீனாட்சி சிவப்பெருமாளை கண்டபொழுது இதன் ஏற்பட்டது.
ஸ்ரீ கண்ணனை காதலிக்கதவார்கள் யாரும் இல்லை.
ஸ்ரீமீரா இன்று கண்ணனுக்காக காத்துக்கொண்டு உள்ளார்...!
ஆதலால் காதல் என்பது ஆன்மீகத்தையும் சார்ந்து உள்ளது...!
உண்மையான காதலுக்கு என்றும் காதலர் தினம் தான்...!!!
இன்று காதலர் தினம்...!!! !14.02.2014
காதலர் தின வாழ்த்துக்கள் .....!!!
இப்பொழுது உள்ள பெற்றோர்கள் குழந்தைகள் மீது அக்கறை இல்லதா நிலையிலோ அந்த குழந்தை அன்புக்கு ஏங்கி வேற அன்புகளை தேடுகிறது.
இன்றைய காலத்தில் சிறுவயதில் ஆன்மீகத்தில் குழந்தைகளை நாட்டம் செலுத்தில் குழந்தைகள் வாழ்க்கை சிறப்பாக அமையும்...!!!

மஹாசிவராத்திரி

மஹாசிவராத்திரி
------------------------------
திருக்கயிலை மாமலையின் பொன் முகடு...!!!

அம்மையும் அப்பனும் அருள் வடிவாக வீற்றிருந்தனர்.
அருகில் விநாயகரும் வேலவனும் விளையாடிக்கொண்டிருந்தனர். 
சிறகைக் கோதியபடி மயில் ஒருபுறம் இருக்க - மறுபுறம் மூஷிகம் கிடைத்ததைக் கொறித்துக் கொண்டிருந்தது.
பொற்பிரம்பினைத் தாங்கியவராக நந்தியம்பெருமான் சேவகம் சாதிக்க -
முப்பத்து முக்கோடி தேவரும் முனிவரும் கணங்களும் வித்யாதரர்களும் யட்சர்களும் நாகர்களும் கின்னரர்களும் ஐயனின் திருவடிகளில் விழுந்து வணங்கி மகிழ்வதற்கு பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்த வேளை அது.
எம்பெருமானின் திருமுடிமேல் வெண்கொற்றக்குடை என படம் விரித்திருந்த நாகராஜன் மெல்ல அசைந்து கொண்டிருந்தான்.
அவனுக்குள் சட்டென ஒரு நினைப்பு.....
''... நமக்கும் சேர்த்துத் தானே... இந்த மதிப்பும் மரியாதையும்!...''

அவன் இறுமாப்பு எய்திய அந்தக் கணமே - அதள பாதாளத்தில் தலைகீழாக விழுந்தான். விழுந்த வேகத்தில், அழகிய தலை ஆயிரமாக சிதறிப் போனது.
ஜயகோஷத்துடன் ஆரவாரித்துக் கொண்டிருந்த பெருங்கூட்டம் அதிர்ச்சி அடைந்து பின் வாங்கி நின்றது.

'' ஈசனின் சிரசில் இருந்தவனுக்கு புத்தி பேதலிக்கலாமா!.. இனி அவன் கதி என்ன ஆகுமோ?.. '' - என அனைவரும் நடுங்கினர்.
கண்ணீரும் செந்நீருமாக கயிலை மாமலையின் அடிவாரத்தில் நின்று கதறினான் நாகராஜன்.
'... ஐயனே!... அகந்தையினால் அறிவிழந்து விட்டேன்... என் பிழைதனைப் பொறுத்தருளுங்கள்... ஸ்வாமி!..''

பாதாளத்திலிருந்து மெல்ல மேலேறிய அவனுக்கு, எம்பெருமானின் சந்நிதியில் வருவதற்கு அச்சம்!...
அம்பிகை ஐயனை ஏறிட்டு நோக்கினாள். அதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள். எம்பெருமானும் புன்னகைத்தார்.
நடந்ததை கவனித்துக் கொண்டிருந்த பிள்ளையார், நாகராஜனிடம் சென்று
'' சிவராத்திரியின் நான்கு காலங்களிலும் எம்பெருமானை வழிபட்டு பாவம் நீங்கப் பெறுவாயாக!...'' - என்று வழிகாட்டினார்.

' உத்தரவு... ஐயனே!...'' என வணங்கிய நாகராஜன், நூலாக நைந்து தொங்கிய தலைகளைத் திரட்டிக் கொண்டு சென்றான்.
பின்னிப் பிணைந்திருந்த, வேம்பு அரசு - விருட்சங்களின் நிழலில் இருந்து விநாயகரைக் குறித்துத் தவம் செய்தான்.
பேரொளியுடன் பிரசன்ன விநாயகர் எதிர் நின்றார். அவரிடம் -
சிவராத்திரியின் நான்கு காலத்திலும் வழிபடும் முறைகளைக் கேட்டறிந்து, அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டான்.

மண்டையில் வைத்துக் கொண்டால் தான் - கனமாகி விடுகிறதே!...
தான் செய்த பிழைக்குப் பிராயச்சித்தம் தேடவேண்டும். அதற்கு ஆதிசேஷன் தலைமையில் மாநாடு கூட்டினான் - நாகராஜன்.
அனந்தன், வாசுகி, தக்ஷகன், கார்கோடகன், சங்கபாலன், குளிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய அனைவருடைய ஆதரவினையும் வேண்டினான்.
''சிவதரிசனம் செய்த மாதிரியும் இருக்கும். ஊர் சுற்றிப் பார்த்த மாதிரியும் இருக்கும்'' - என்று அனைவரும் உடனே தலைகளை ஆட்டி சம்மதித்தனர்.
ஆனால், அவர்களுக்குத் தெரியாது - இரவில் சிவபூஜை செய்யப் போவது!....
தலை சிதறிய வேதனையிலும் - மகிழ்ச்சியடைந்த நாகராஜன், தன் இனத்தின் அத்தனை தலைகளையும் உடன் அழைத்துக் கொண்டு, ஆதிசேஷன் தலைமையில் - காவிரியின் தென்கரைக்கு விரைந்தான்.
மகா சிவராத்திரியை நோக்கி அத்தனை பேருடன் தவமிருந்தான்.
அவனை நல்ல காலம் நெருங்கியது.

சிவராத்திரியின் முதல் காலம்
---------------------------------------------
(மாலை 6 மணி முதல் முன்னிரவு 9 மணி வரை)
விநாயகர் குறித்துக் கொடுத்தபடி - காவிரியில் நீராடினான். தலைக்காயம் கொஞ்சம் ஆறியிருந்தது. நதிக்கன்னியர் நீராடிய திருக்குளத்தில் மீண்டும் நீராடினான்.
தன்னை மறந்த நிலையில் தன் பிழை தீர - சிவபூஜை செய்தான். மனம் நிறைவாக இருந்தது.
கண்களில் நீர் வழிய நெடுங்கிடையாக விழுந்து வணங்கினான்.
இரண்டாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

சிவராத்திரியின் இரண்டாம் காலம்
----------------------------------------------------
(இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)
முதற்கால பூஜையினை நிறைவு செய்த நாகராஜன் தன் கூட்டத்தாருடன் விரைவாக வந்து சேர்ந்த திருத்தலம் செண்பக மரங்கள் அடர்ந்திருந்த சண்பகாரண்யம்.
அங்கே ஆதியில் சூரியனும் சந்திரனும் சிவபெருமானை வணங்கியபோது உண்டாக்கியிருந்த சூரிய புஷ்கரணி நீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது.
பயணக் களைப்பு தீர - நன்றாக முழுகிக் குளித்தனர் எல்லோரும்!...
இரண்டாங்காலத்தில் இறைவனை வழுத்தி வணங்கி நின்றான் நாகராஜன்.
''தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி!...
தூநீறு மெய்க்கணிந்த சோதி போற்றி!... ''
- என்று தொழுது நின்றான். நினைவில் சேர்ந்த அழுக்கு தீர அழுது நின்றான்.
மூன்றாம் காலம் நெருங்கிக் கொண்டிருந்தது.

சிவராத்திரியின் மூன்றாம் காலம்
------------------------------------------------------
(நள்ளிரவு 12 மணி முதல் பின்னிரவு 3 மணி வரை)
நள்ளிரவு. இருளில் தட்டுத் தடுமாறினாலும் - தடம் மாறாமல் விநாயகர் அருளிய திருக்குறிப்பின்படி வந்து சேர்ந்தாகி விட்டது.
இனி தாமதிக்க நேரமில்லை. நலிந்திருந்த நாகராஜனுக்குத் துணையாக ஆதிசேஷன் தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தான். குறைகள் தீரும் வண்ணம் குளித்தாகி விட்டது.
ஆலம் விழுதில் அகத்திப் பூக்களைத் தொடுத்து ஐயனுக்குச் சாற்றி -
''..அகந்தை அழித்த அருட்சுடரே!..'' - எனப் பணிந்து வணங்கினான் நாகராஜன்.
கண்களில் நீர் வழிய மெய்மறந்து நின்ற நாகராஜனிடம் - நான்காம் காலம் நெருங்குவது நினைவூட்டப்பட்டது.

சிவராத்திரியின் நான்காம் காலம்
----------------------------------------------------
(பின்னிரவு 3 மணி முதல் விடியற்காலை 6 மணி வரை)
பிழை பொறுத்து அருளும் பெருமான் உறையும் திருத்தலம் அல்லவா!..
பரபரப்புடன் ஓடி வந்தனர். மெய் சோர்ந்தது. கண்கள் பெருகி வழிந்தன.
சாப விமோசனம் நிகழும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் நாகராஜனுக்கு அழுகையும் ஆற்றமையும் அடக்க முடியாமல் பொங்கிப் பீறிட்டு வந்தன.
ஆதிசேடன் அருகிருந்து ஆதரவுடன் அணைத்துக் கொண்டான்.
புண்டரீக மாமுனிவர் அமைத்திருந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தான் நாகராஜன்.
அங்கே விநாயகர் எழுந்தருளி - கருணையுடன் நாகராஜனை வாழ்த்தினார். அவருடைய திருவயிற்றில் உதரபந்தனமாக நாகம் ஒன்று நெளிந்து கொண்டிருந்தது.

நாகாபரணப் பிள்ளையாரின் திருப்பாதங்களில் விழுந்த நாகராஜன் ''ஓ'' எனெக் கதறி அழுதான்.
நாகராஜனின் சிரத்தில் கை வைத்து தேற்றினார் விநாயகர். அவருடைய அனுமதியுடன் திருத்தலத்தினுள் பிரவேசித்தான்.
கால்கள் தள்ளாடின. கண்களில் நீர் சுரந்து பெருகி பார்வையை மறைத்தது.
கரங்களைத் தலைக்கு மேல் தூக்கி வணங்கியபடி - சிவலிங்க பீடத்தில் தன் கூட்டத்தாருடன் விழுந்தான்.
''...குற்றமே செய்த கொடிய மகன். ஆனாலும் புத்திர வாஞ்சையுடன் என்னைப் பொறுத்தருள்க!.. எம்பெருமானே!..''
குமுறி அழுத நாகராஜனின் கண்கள் கூசின.

அவன் செய்த வழிபாட்டின் பெரும்பயனாக - பேரொளிப் பிழம்பென,
கவலைகளை எல்லாம் தீர்த்தருளும் கருந்தடங்கண்ணி அம்பிகையும் கருநீலகண்டனாகிய காயாரோகண ஸ்வாமியும் தோன்றியருளினர்.
அவர்தம் பாதாரவிந்தங்களைப் பற்றித் தொழுதான். தன் பிழை பொறுத்தருள வேண்டினான்.
அம்மையும் அப்பனும் புன்னகைத்தனர்.
பாவம் நீங்கிய நாகராஜனும் முன் போலவே திருக்கயிலை மாமலையில் ஐயனின் அடி போற்றி பணி செய்து கிடக்கும் பெருவாழ்வுதனைப் பெற்றான்...!!!

உடம்பின் கால அட்டவணை

Foto: உடம்பின் கால அட்டவணை ........!!!
நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு. 
இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் 
போக வேண்டிய அவசியமே இல்லை. 

இதோ கால அட்ட வணை:
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். 
இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.
காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். 
இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். 
இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். 
வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். 
இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. 
தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். 
சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை
அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். 
மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். 
தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் 
ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல்
அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். 
அவசியம் உறங்க வேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். 
ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். 
கட்டாயம் தூங்க வேண்டும்....!!!

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.
இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம்
போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை:
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம்.
இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.
காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம்.
இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம்.
வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம்.
இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது.
தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம்.
சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை
அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம்.
மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம்.
தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும்
ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல்
அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம்.
அவசியம் உறங்க வேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம்.
ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம்.
கட்டாயம் தூங்க வேண்டும்....!!!

அகத்தியர் எழுதிய லக்ஷ்மி சுலோகம்

அகத்தியர் எழுதிய லக்ஷ்மி சுலோகம்
அகத்திய முனிவர் தம்முடைய மனைவி லோபாமுத்திரையோடு கொல்லாபுரம் என்னும் ஊருக்குச் சென்றார். அங்கு திருமகள் திருக்கோயில் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றபோது திருமகள்மீது இப்பாடல்களைப் பாடிப்போற்றினார்.
அப்போது திருமகள் அகத்தியருக்குக் காட்சி கொடுத்து, "உன்னுடைய 'போற்றி' பாடல்களுக்கு நான் மனமகிழ்ந்தேன். இப்பாடலைப் பாடி போற்றிய யாவரும் கெடுதற்கு அரிய, பெரிய இன்பங்களை நுகர்வார்கள். இப்பாடல்களை எழுதப் பெற்ற ஏடானது இல்லத்திலே இருக்குமானால் வறுமையைக் கொடுக்கின்ற தவ்வையானவள் அவ்வில்லத்தை அடையமாட்டாள்", என்று திருவாய் மலர்ந்தருளினாள்.
இப்பாடல்களை நாள்தோறும் படிப்பவர்கள் பெரும் செல்வத்தை அடைந்து அச்செல்வத்தை நுகர்வர்...!!!

நூல்
மூவுலகும் இடறியற்றும் அடலவுணர்
உயிரொழிய முனிவு கூர்ந்த
பூவையுறழ் திருமேனி அருட்கடவுள்
அகன்மார்பில் பொலிந்து தோன்றித்
தேவர் உலகினும் விளங்கும் புகழ்க் கொல்லா
புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவையிரு தாழ்தொழுது பழமறைதேர்
குறுமுனிவன் பழிச்சுகின்றான்

கொழுதியிசை அளிமுரலும் தாமரைமென்
பொகுட்டி லுறை கொள்கைபோல
மழையுறலும் திருமேனி மணிவண்ணன்
இதயமலர் வைகுமானே
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே
கரகமலம் முகிழ்த்தெந் நாளும்
கழிபெருங் காதலில் தொழுவோர் வினை தீர
அருள்கொழிக்கும் கமலக்கண்ணாய்

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி
செழுங்கமலக் கையாய் செய்ய
விமலை பசுங்கழை குழைக்கும் வேனிலான்
தனையீன்ற விந்தை தூய
அமுத கும்ப மலர்க்கரத்தாய் பாற்கடலுள்
அவதரித்தோய் அன்பர் நெஞ்சத்
திமிரமகன்றிட ஒளிரும் செழுஞ்சுடரே என
வணக்கம் செய்வான் மன்னோ

மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும்
செந்துவர் வாய் மயிலே மற்றும்
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன்
உலகமெலாம் காவல் பூண்டான்
படைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி
மதிபுனைந்த பரமன் தானும்
துடைத்தனன் நின் பெரும்சீர்த்தி எம்மனோ
ரால் எடுத்துச் சொல்லற் பாற்றோ

மல்லல்நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித்
தனிபுறக்கு மன்னர்தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில்
நிகரில்லாக் காட்சியோரும்
வெல்படையில் பகை துரந்து வெஞ்சமரில்
வாகை புனை வீரர் தாமும்
அல்லிமலர் பொகுட்டு றையும் அணியிழை நின்
அருள்நோக்கம் அடைந்து ளாரே

செங்கமலப் பொலந்தாதில் திகழ்ந்தொளிறும்
எழில்மேனி திருவே வேலை
அங்கண்உல கிருள்துரக்கும் அலர்கதிராய்
வெண்மதியாய் அமரர்க் கூட்டும்
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே
நெடுங்கானில் பொருப்பில் மண்ணில்
எங்குளை நீ, அவணன்றோ மல்லல் வளம்
சிறந்தோங்கி இருப்ப தம்மா

இலக்குமி தோத்திரப் பலன் ...!!!
என்று தமிழ்க்குறுமுனிவன் பன்னியொடும்
இருநிலத்தில் இறைஞ்ச லோடும்
"நன்றுனது துதி மகிழ்ந்தோம், நான்மறையோய்,
இத்துதியை நவின்றோர் யாரும்
பொன்றலரும் பெரும்போகம் நுகர்ந்திடுவர்
ஈங்கிதனைப் பொறித்த ஏடு
மன்றல்மனை அகத்திருப்பின் வறுமைதரு
தவ்வை அவண் மருவல் செய்யாள்"

கண்ணனவன் பதம் பணிவேன்

அரவணைமேல் துயிலுறுவோன் அமைதிமிகு
உருவத்தோன் விரிகமல உந்தியுடை
விண்ணவரின் நாயகன் விண்போலே
வியாபித்த விச்வரூபன் கார்வண்ணன்
மங்களம் சேர் அங்கத்தோன் திருமகளின் மனமீர்த்தோன்
பங்கயக்கண் படைத்தவனாம் யோகிர்தம் தியானத்தால்
மனத்துள்ளெ உணரலாகும் விஷ்ணுவையே வழிபடுவேன்
அனைத்துலகின் அதிபதி என் பிறவிபயம் போக்கிடுவான்..!
 
முகில்வண்ணன் மறுஉரத்தே தாங்கினவன் பீதகமாம்
துகிலுடையோன் கௌஸ்துபமாம் மணிஒளிரும் மார்புடையோன்
சான்றோர்கள் சூழ்ந்தி்ருப்போன் விரிகமல விழியுடையோன்
மூன்றுலகின் நாயகனாம் நாரணனை நான்பணிவேன்...!
 
சங்கும்திருச் சக்கரமும் குண்டலமும் கிரீடமுடன்
தங்கத்துகில் தரித்தவனாம் தாமரையாம் திருக்கண்ணன்
மாலையணி மணிமார்பில் கௌஸ்துபம் ஒளிவிளங்க
நால்வரைத் தோளுடைய நாரணனை நான்பணிவேன்...!
 
பாரிஜாத மரநிழலில் பொன்னிருக்கை தனிலிருக்கும்
கார்மேக வண்ணன்விரி கன்ணன்எழில் அலங்காரன்
முகம்நிலவு புயம்நான்கு ஸ்ரீவத்ஸமொடு மலர்மார்பன்
ருக்மணியும் பாமையும்சேர் கன்ணனவன் பதம்பணிவேன்.

ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய

இதுதான் என் தாரக மந்திரம் ..!!!
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய

ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் தெளிந்துபின்
ஓம்நம சிவாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நம சிவாயமே உட்கலந்து நிற்குமே.

ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய
ஓம் நம சிவாய ஓம் ஓம் நம சிவாய

வியாழன், 6 மார்ச், 2014

புதன் விஷ்ணு பகவான் வழிபாடு

இன்று புதன் விஷ்ணு பகவான் வழிபாடு ..!!!
ஓம் நமோ நாராயணாய !
எம்பெருமான் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வழங்கி...
மிகவும் களிப்பு ஆகிவிட்டார் . ஆதலால் எம்பெருமான்
திருமகள் மடியில் அனந்த சயனம்....ஆனந்தமாக துயில்கிறார் ..!
எம்பெருமானுக்கு இது களிப்பா ..என்ன ஒரு ராஜலீலை ...!!!

சனி பகவான் (3.03.2014) அன்று வக்கிர நிலை

சனி பகவான் (3.03.2014) அன்று வக்கிர நிலை
அடைந்துள்ளர் . ஆதலால் கன்னி ராசி ,தூலம்
ராசி கவனமாக செயல்படவேண்டும்..!!!
சனி வக்ர நிவர்த்தி (21.7.14)

தோஷங்கள் போக்கும் பரிகாரம்

Foto: தோஷங்கள் போக்கும் பரிகாரம்....!!!
அனைத்துத் தோஷங்களுக்கும் பொருந்தக்கூடிய 
ஒரு விசேஷமான வழிமுறையை கொண்ட தோஷ பரிகாரங்கள்:
ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ, அல்லது அவரவரது ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ மாலையில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். 27 செவ்வாய்க்கிழமைகள் கணக்கு. அவ்வாறு 27 செவ்வாய்க்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு அதை சுப்பிரமணியரின் திருவுருவத்தின் முன்பு வைத்து, அவரது மந்திரங்களில் ஏதாவது ஒன்றை 108 முறை உச்சாடனம் செய்து, தூப தீப ஆராதனைகளுக்குப் பிறகு அந்தப் பசும் பாலை அவர்கள் மட்டும் அருந்திப் பூஜையை நிறைவு செய்யலாம். அன்று இரவு மட்டும் பால், பழம் அருந்தி விரதமிருக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.வியாழக்கிழமைகளில் செய்து வந்தால் பரிபூரண பலன் கிடைக்கும்...!!!தோஷங்கள் போக்கும் பரிகாரம்....!!!
அனைத்துத் தோஷங்களுக்கும் பொருந்தக்கூடிய
ஒரு விசேஷமான வழிமுறையை கொண்ட தோஷ பரிகாரங்கள்:
ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்றோ, அல்லது அவரவரது ஜன்ம நட்சத்திர தினத்தன்றோ மாலையில் ஆரம்பித்துச் செய்ய வேண்டும். 27 செவ்வாய்க்கிழமைகள் கணக்கு. அவ்வாறு 27 செவ்வாய்க்கிழமைகளில் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு அதை சுப்பிரமணியரின் திருவுருவத்தின் முன்பு வைத்து, அவரது மந்திரங்களில் ஏதாவது ஒன்றை 108 முறை உச்சாடனம் செய்து, தூப தீப ஆராதனைகளுக்குப் பிறகு அந்தப் பசும் பாலை அவர்கள் மட்டும் அருந்திப் பூஜையை நிறைவு செய்யலாம். அன்று இரவு மட்டும் பால், பழம் அருந்தி விரதமிருக்க வேண்டும்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.வியாழக்கிழமைகளில் செய்து வந்தால் பரிபூரண பலன் கிடைக்கும்...!!!

ஒன்றே செய்..! நன்றே செய்

மனதை ஒரு நிலைப்படுத்தி வெற்றி பெற ....!!!
ஒன்றே செய்..! நன்றே செய் ...! இன்றே செய்...!!!
ஒரு இளைஞனுக்கு மகானாக வேண்டும் என்ற ஆசை எழுந்தது. என்ன செய்தால் மகான் ஆகலாம் என யோசித்தான். நண்பர்களிடம் யோசனை கேட்டு பார்த்தான். அவர்கள் கேலி செய்தார்களே தவிர வழி சொல்வதாகத் தெரியவில்லை.
எதற்கு வம்பு? ஒரு மகானிடமே கேட்டுவிட்டால், தன் கேள்விக்கு பதில் கிடைத்து விடுமென ஒரு சிறந்த மகானை நாடிப் போனான். காவியும், பட்டையுமாய் அமர்ந்திருந்த அவரிடம், சுவாமி! உங்களை மகான் என்று ஊரே புகழ்கிறது. உங்களது இந்த நிலைக்கு காரணம் என்ன? என்று கேட்டான். உண்கிறேன், உறங்குகிறேன், தியானம் செய்கிறேன், என்றார் அவர். இளைஞன் சிரித்து விட்டான். ஏன் சாமி! இதைத்தான் ஊரில் எல்லாரும் செய்கிறார்களே! அப்படியானால் எல்லாரும் மகான் தானா? என்று சற்று நையாண்டியை குரலில் குழைத்துக் கேட்டான்.

தம்பி! எல்லாரும் அதைத் தான் செய்கிறார்கள். ஆனால், நான் உண்ணும் போதும், உறங்கும் போதும், தியானம் செய்யும் போதும் அதை மட்டுமே செய்கிறேன். மற்றதை பற்றி நினைப்பதில்லை. மனதை அந்தச் செயலில் மட்டுமே நிலைப்படுத்துகிறேன். ஆனால், சாதாரண மனிதர்கள் ஒன்றைச் செய்யும் போது, மற்றதில் மனதைத்திருப்புகிறார்கள். அதுதான் அவர்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம், என்றார். இப்போது தான் இளைஞனுக்குப் புரிந்தது. மனதை ஒருநிலைப்படுத்தி ஒன்றைச் செய்தால் தான் மகானாக முடியுமென்று! இப்போது புரிந்து கொண்டீர்களா மனதை ஒருநிலைப்படுத்தி செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றியடையுமென்று..!!! ஒன்றே செய்..! நன்றே செய் ...!இன்றே செய்...!!!
எனக்கு இனிய எம்மானை ஈசனை யான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கு அவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கு அரியது ஒன்று .
என் உயிருக்கு இனிமை தரும் சிவபெருமானாரை மனத்திற்கு இனிய பெருஞ்செல்வமாகப் பொதித்து வைத்தேன் (மனத்தில் அடக்கி வைத்தில்) அவரையே எம்மை வழிநடத்தும் தலைவராக் கொண்டேன் அவ்வாறு கொண்டவுடன் பேரின்பம் உற்றேன். இனிமேல் எனக்கு அரிதாகிய பொருள் வேறு ஒன்று உண்டோ? என்கிறார் காரைக்கால் அம்மையார்

பைரவ அஷ்டகம்

ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் ===========================
தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவன
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான் ..!!!

விரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு :
==================================
எட்டாவது திதிநாள் எனப்படும் வளர்பிறையிலும்
தேய்பிறையிலும் வரும் எட்டாவது திதிநாட்கள் பைரவ வழிபாட்டிற்குரியவை.
இவ்விரு அஷ்டமிகளில் தேய்பிறை அஷ்டமி விரதம் இருந்து சிவனை வழிபடுவதற்குரிய நாள். ஆடித்தேய்பிறை அஷ்டமிக்கு நீலகண்ட அஷ்டமி என்ற பெயரும் உண்டு. இந்த நாளில் பழங்கள் மட்டுமே உண்டு அர்ச்சிக்க வேண்டும். தட்சிணாமூர்த்தியை மேட்கொண்டு நடத்தும் விரதம் இது. ஞாயிறு பைரவ வழிபாட்டிற்கு உகந்த நாள். திரிபுவனம் ஸ்ரீ சரபர் - திருவிசலூர் சதுர்கால பைரவர் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்து பைரவரை வழிபடலாம்.
நவக்கிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.
குழந்தைப்பேறு கிட்ட தம்பதியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவப்பு நிறப் பூக்களால் ஸ்கஸ்ரநாமா அர்ச்சனை செய்ய வேண்டும்.
வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமே ஸ்கஸ்ரநாமமோ அர்ச்சனை செய்யது 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். அஷ்டமிகளில் தொடர்ந்து வழிபடவேண்டும்.
இழந்த சொத்தைத் திரும்பப் பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நெய் அல்லதி நல்லெண்ணை இட்டு தீபம் ஏற்றுவது பைரவ தீபமாகும்.

சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால்அர்ச்சனை செய்யது 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
திருமணத் தடை நீங்க ஞாயிறு இராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாத்தி அர்ச்சனை செய்ய வேண்டும்.
பகைபயம் நீங்க 9 முறை பைரவருக்கு அர்ச்சனை செய்யது வசதிக்கு ஏற்ப நிவேதனங்கள் செய்ய வேண்டும். இப்படி 9 கிழமைகள் செய்தால் வியாபார நஷ்டம் விலகும், எல்லாத் தொல்லைகளும் அகலும்.
தீராத் நோய்கள் தீர பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும். அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள பிணிகள் தீரும்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.
தினந்தோறும் காலையில் " ஓம் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷணபைரவாய நமஹ " என்று ஜெபிப்பது நல்லது...!!!

அம்பிகை அந்தாதி:

3. அம்பிகை அந்தாதி:
Foto: 3. அம்பிகை அந்தாதி:

10. உணர்வகமாய் பலநலமாய் உறுதிநிற்கும் இமையவள்!

பராபரையாய் பகுத்தளித்த பராசக்தியைப்
          பரிந்துவக்கப் பகிருதலும்
பராமரித்துப் பிறர்களிக்கப் பண்ணுதலும்
          பரானுபவப் பரமானந்தத்
தராதரமாய் துய்ப்பதிலும் துன்பமதைத்
          துடைப்பதிலும் ஐம்புலத்துச்
சராசரமாய் உள்ளமதாய்ச் சலனிப்பதும்
          சுவாசிப்பதுவும் கடவுளுறையே!

(பராபரை = சிவசக்தி; பகுத்தளித்த = பிரித்து வழங்கிய; பராசக்தி = சிவ ஆற்றல், பேராற்றல்; பரிந்துவக்க = பரிந்து + உவக்க; பரிந்து = இரங்கி;  உவக்க = விரும்பி, மகிழ்ந்து; பகிருதல் = சேர்ந்து பங்கிட்டுக் கொள்ளுதல்; பராமரி = ஆதரி, பேணு, கா, கருது, ஆராய்; பிறர்களிக்க = பிறர் + களிக்க;  களி = மகிழ்வடை; பரானுபவம் = பேரனுபவம்; பரமானந்தம் = பேரின்பம்; தராதரம் = பகுப்பு மதிப்பீடு, மலை, மேன்மை; துய்ப்பு = நுகர்ச்சி, அனுபவித்தல்;  துடைத்தல் = நீக்குதல், போக்குதல்; ஐம்புலத்து = ஐந்து புலன்கள் வழி; சராசரம் = இயலுலகு, பிரபஞ்சம்; உள்ளம் = இருதயம்; சலனிப்பது = அசைதல்,  இயங்குவது, துடிப்பது; சுவாசிப்பது = மூச்சுவிடுதல்; உறை = வாழ்நாள், மருந்து, உணவு, உறுதியாக இரு, வாழ், தங்கு; )

பரம்பொருள் சிவசக்தியாகப் பகிர்ந்து வழங்கிய சிவப் பேராற்றலை கருணை மிகுக்க இரங்கி, மகிழ்வோடு பிறர்பால் பங்கிட்டுக் கொள்ளுதலும், அவற்றைப் பேணிக் காத்து பிறரை இன்புறச் செய்தலும், பேரனுபவப் பேரின்பத்தை உயர்வகைத் தரத்தோடு மலையென மேன்மை பொருந்த நுகர்வதிலும், இடர்ப்படும் துன்பங்களை நீக்கிப் போக்குவதிலும், கண், காது, மூக்கு, வாய், உடல் எனும் ஐம்பொறி உணர்வு வழி, இயல் உலகமாக இதயமாகத் துடிப்பொடு இயங்குவதும், சுவாசிப்பதும்; உடலுக்குள் உயிரெனும், புனித உள் உறையும் ஆன்ம சீவ சக்தியின் இருப்பே ஆகுமே அன்னைப் பராசக்தியே!

பிரக்ஞை, எழுச்சி, புலன்களின் அறிநிலை, உள்ளுணர்வு அனைத்திற்கும் தாயக மையமாக, பல்வகை நலங்களை உடலிற்கும், ஆன்மாவிற்கும் அனுபவங்களாக வழங்கி, ஆதார உறுதியோடு கண்ணிற்கு இமை போன்று காத்து இலங்குபவள் அன்னை அம்பிகையே!

***


10. உணர்வகமாய் பலநலமாய் உறுதிநிற்கும் இமையவள்!

பராபரையாய் பகுத்தளித்த பராசக்தியைப்
பரிந்துவக்கப் பகிருதலும்
பராமரித்துப் பிறர்களிக்கப் பண்ணுதலும்
பரானுபவப் பரமானந்தத்
தராதரமாய் துய்ப்பதிலும் துன்பமதைத்
துடைப்பதிலும் ஐம்புலத்துச்
சராசரமாய் உள்ளமதாய்ச் சலனிப்பதும்
சுவாசிப்பதுவும் கடவுளுறையே!

(பராபரை = சிவசக்தி; பகுத்தளித்த = பிரித்து வழங்கிய; பராசக்தி = சிவ ஆற்றல், பேராற்றல்; பரிந்துவக்க = பரிந்து + உவக்க; பரிந்து = இரங்கி; உவக்க = விரும்பி, மகிழ்ந்து; பகிருதல் = சேர்ந்து பங்கிட்டுக் கொள்ளுதல்; பராமரி = ஆதரி, பேணு, கா, கருது, ஆராய்; பிறர்களிக்க = பிறர் + களிக்க; களி = மகிழ்வடை; பரானுபவம் = பேரனுபவம்; பரமானந்தம் = பேரின்பம்; தராதரம் = பகுப்பு மதிப்பீடு, மலை, மேன்மை; துய்ப்பு = நுகர்ச்சி, அனுபவித்தல்; துடைத்தல் = நீக்குதல், போக்குதல்; ஐம்புலத்து = ஐந்து புலன்கள் வழி; சராசரம் = இயலுலகு, பிரபஞ்சம்; உள்ளம் = இருதயம்; சலனிப்பது = அசைதல், இயங்குவது, துடிப்பது; சுவாசிப்பது = மூச்சுவிடுதல்; உறை = வாழ்நாள், மருந்து, உணவு, உறுதியாக இரு, வாழ், தங்கு; )

பரம்பொருள் சிவசக்தியாகப் பகிர்ந்து வழங்கிய சிவப் பேராற்றலை கருணை மிகுக்க இரங்கி, மகிழ்வோடு பிறர்பால் பங்கிட்டுக் கொள்ளுதலும், அவற்றைப் பேணிக் காத்து பிறரை இன்புறச் செய்தலும், பேரனுபவப் பேரின்பத்தை உயர்வகைத் தரத்தோடு மலையென மேன்மை பொருந்த நுகர்வதிலும், இடர்ப்படும் துன்பங்களை நீக்கிப் போக்குவதிலும், கண், காது, மூக்கு, வாய், உடல் எனும் ஐம்பொறி உணர்வு வழி, இயல் உலகமாக இதயமாகத் துடிப்பொடு இயங்குவதும், சுவாசிப்பதும்; உடலுக்குள் உயிரெனும், புனித உள் உறையும் ஆன்ம சீவ சக்தியின் இருப்பே ஆகுமே அன்னைப் பராசக்தியே!

பிரக்ஞை, எழுச்சி, புலன்களின் அறிநிலை, உள்ளுணர்வு அனைத்திற்கும் தாயக மையமாக, பல்வகை நலங்களை உடலிற்கும், ஆன்மாவிற்கும் அனுபவங்களாக வழங்கி, ஆதார உறுதியோடு கண்ணிற்கு இமை போன்று காத்து இலங்குபவள் அன்னை அம்பிகையே!