கோவில்களுக்கும் பாடசாலைகளுக்கும் குறைவில்லாத ஒரு ஊர் என்றால் அது புங்குடுதீவு என்றால் மிகையாகாது .இதனை எமது ஊர் மக்கள் மட்டுமன்றி வேற்று ஊரவர்களும் நகைச்சுவையாக சொல்லி உரையாடுவது உண்மை .,புங்குடுதீவில் நிலப் பரப்பளவு ,சனத்தொகை மதிப்பீடு என்பவற்றை புள்ளி விவரப்படுத்தி நோக்கு மிடத்து கோவில்கள் கூடுதலாகத்தான் இருக்கிறது என்பது புலப்படுகின்றது .ஆனாலும் இவ்வாறு அதிகமான கோவில்களை கட்டி மக்கள் வழிபாடு செய்து வர காரணம் என்ன என்று ஆராய்ந்து கொண்டு போவோமானால் ஆதாரப்பூர்வமான பல விடைகள் எமக்கு கிடைக்கின்றன.
கிபி 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூர்த்திக்கு ஆசிரியர்களான குவேரோஸ் கொங்கர் தீவு என்றும் ரிபேய்ரா புங்கர்திவிய என்றும் புங்குடுதீவை பெயர் கொண்டு எழுதியுள்ளார்கள் இவர்கள் அந்த வேளையில் 100% சைவ மக்கள் வாழ்ந்துள்ளதாக குறிப்பிடுகிறார்கள் ஆனால் பாளி மொழியில் உள்ள மகா வம்சம் தீப வம்சம் சிங்கள மொழியில் உள்ள நம்பொத்த போன்ற நூல்களில் ஆதாரங்களில் இபி மூன்றாம் நூற்றாண்டில் அதாவது பௌத்தம் இலங்கையில் பரவிய காலத்திலேயே பன்னிரண்டாயிரம் பௌத்த குருமார் குடியேறி இருந்ததாகவும் அவர்கள் தனிப்பட்ட அமைதியான காடுகளைப் போல இந்த தீவுகளை விரும்பி வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது இவர்களில் ஒரு சாரார் மிக உயர்ந்த பௌத்த ஞான நிலையில் உள்ள அரகாந்த் ஸ்க்க ளாக இருந்தனர் எனப்படுகிறது பெரும்பாலானோர் எல்லாளன் துட்டகைமுனு போரில் கொல்லப்பட்டு விட்டதாக கூறுகிறது இதனை அறிந்த துட்டகைமுனு பெரும் கவலையிலிருந்ததாக அறிய முடிகிறது தொடர்ந்து இரண்டு நூற்றாண்டுகள் இங்கே பௌத்தம் நிலவு இருந்தது என கிபி 15 ஆம் நூற்றாண்டை பற்றி எழுதுகையில் த நத்தம்பொத்த நூல் சொல்கிறது கிபி 9 12ஆம் நூற்றாண்டுகளில் சோழப் பெறுமன்னர் இலங்கை முழுவதையும் தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வந்திருந்தார் உன் இரண்டாவது பாண்டியர் பிரஸ் காலத்திலே அவர்களது தளபதிக்கு ஒருவரான ஹரி சக்கரவர்த்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் தமிழரசை 10250 ஆம் ஆண்டில் உருவாக்கி 1619 வரை போர்த்துக்கேசவருகை வரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் இந்தக் காலத்தில் சைவ சமயம் மீண்டும் முழு மூச்சுடன் தலை தூக்கி இருந்ததாகவும் இதனால் பௌத்தம் எந்த வித அடையாளமும் ஒன்றை அழிந்து போனதாகவும் சொல்லப்படுகின்றது புங்குடுதீவு மண்ணில் அந்நியர்களின் ஆட்சியில் கிரேக்க ரோம அராபிய இந்திய ஆட்சி வர்த்தக தொடர்புகளினால் பல பெயர்கள் தோன்றி இருக்கின்றது அராபிய க வர்த்தகர்களின் தொடர்பி னால் பெருக்குமரம் இங்கு வந்திருக்கலாம் என கூறப்படுகின்றது மேலும் பல்ல தீவு பல்லவன் குலம் பாண்டியன் வளவு கலிங்கன் குளம் செட்டி வளவு பனிக்கண் புலம் கிராஞ்சி பூங்குடி போன்ற பெயர்கள் இவற்றுக்கு ஆதாரங்களாகும்
ஐரோப்பியர்கள் எமது நாட்டை ஆட்சி செய்த போது போர்த்துகீசர் மட்டும் தனியாக மதத்தினை பரப்புவதில் முன் நின்றனர் .அவர்கள் தமது மதத்தினை முரட்டுத்தனமாக அல்லது வலுக்கட்டாயமாக பரப்புகின்ற கொள்கையினை கடைபிடித்தனர். மக்களை சலுகை கவர்ச்சி காட்டி மதம் மாற்றுவதில் வெற்றியும் கண்டனர்.தரமான கல்வியை வழங்குதல், அரசாங்கப் பதவிகளை வழங்குதல் ,சலுகைகளை வழங்குதல் போன்ற வழிகள் அவர்கள் இந்த மத மாற்றத்திற்கு பயன்படுத்திய மூலதனங்கள். மக்களுக்கு இந்த வழிகளில் ஆசை காட்டி மதம் மாற்றி வெற்றிகண்ட வகையில் பாடசாலைகளையும் கிறிஸ்தவ தீவாலயங்களையும் ஆங்காங்கே வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான முறையில் கட்டி மக்களை திசை திருப்பினர் தரமான கல்வி வழங்குகளில் தங்களது பாடசாலைகளை உச்சக்கட்டத்தில் வைத்திருந்தனர் அமெரிக்க மிசன், மெதடிஸ்ட், ரோமன் கத்தோலிக்கம், திருக்குடும்பக் கன்னியர் மடம் போன்ற மயங்கு நிலை நாமங்களில் பாடசாலைகளை நடத்தி மக்களை உள்வாங்கினர் .தீவகம், மாலிப்பாய் பிரதேசம், பருத்தித் துறை பகுதி, சாவ கச்சேரி பகுதி, இளவாலைப் பகுதி, மாதகல் பிரதேசம் என்று எங்கும் பாடசாலைகளை அமைத்தனர் .தீவகத்தில் இவ்வாறு சிறு சிறு திக்குகளில் மக்களை ஏமாற்றி வெற்றியும் கண்டனர் .காவலூர் நாரந்தனை நெடுந்தீவு புங்குடு தீவில் முருக்கடி பெருங்காடு மாரியம்மன் கோவிலடி மத்திய கல்லூரிக்கு பின்பகுதி போன்ற இடங்களை கிறிஸ்தவமயமாக்கி குடும்பம் குடும்பமாக தங்கள் மதத்தினை கடைப்பிடிக்க வைத்தார்கள். இந்த முயற்சியில் முடிவில் எமது ஊரில் மட்டும் பல பாடசாலைகள் கூட நிறுவப்பட்டன .மடத்துவெளியில் தற்போது உள்ள கமலாமாம்பிகை மகா வித்யாலயம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேத பாடசாலை ஒன்றை யம் சைவப் பாடசாலை ஒன்றையும் இணைத்து உருவானதே .இது மட்டுமன்றி பெருங்காடு அமெரிக்க மிஷன், இருப்பிட்டி அமெரிக்க மிஷன், ரோமன் கத்தோலிக்கம் போன்ற பாடசாலைகளும் இவ்வாறு உருவாக்கப்பட்டன
இந்த அடிமைத்தனத்தின் கீழ் வாழ்ந்து வந்த மக்களின் சைவ சமய வழிபாட்டுரிமை பறிக்கப்பட்டு ஆலய வழிபாட்டு கலாச்சாரம் முற்றாக அளிக்கப்பட்டு இருந்த காலம் மெதுவாக அந்நியர்கள் எமது மண்ணை விட்டு வெளியேறும் தருணத்தில் அல்லது அதற்கு சற்று முன்னர் எமது ஊரின் கல்வித் தந்தை பசுபதிப்பிள்ளை அவர்களும் அவரோடு சார்ந்து இருந்த பல ஆன்மிகப் பெரியோர்கள் முன்னணி ஆசிரியர்களும் ஒன்றிணைந்து சைவக் கோயில்களை கட்டுவதில் காலடி வைத்தனர் அத்தோடு சைவ சமயத்தை போதிக்கின்ற பாடசாலைகளை நிறுவி ஊருக்கு பெரும் தொண்டாற்றினர் இவர்கள் பாடசாலைகளின் பெயர்களை கூட நல்ல ஆன்மீக நாமங்களாக சூட்டி மகிழ்ந்தனர் திருநாவுக்கரசு கமலாம்பிகை கணேசு பராசக்தி சண்முகநாதன் என்றவாறு பாடசாலைக்கு பேர்களை வைத்து சைவத்துக்கு வழி வகுத்தனர் போர்த்துக்கேயர் காலத்தில் கத்தோலிக்க சமயத்தை பரப்பிய கெடுபிடிகள் சைவ சமயத்தினர் விரதங்கள் பிடிப்பதை கண்டுபிடித்தால் கடுமையான தண்டனை கிடைக்கும் அதனால் எம்மவர் விரத நாட்களில் சாப்பிட்டு விட்டு அவற்றைக் கூரைக்குள் சொருகி ஒழித்து வைப்பார்கள்
1800 களின் ஆரம்பத்திலேயே எமது ஊரில் பல பெரிய சைவ கோயில்கள் கட்டி வழிபாடு செய்யப்பட்டிருந்தமை யாழ்ப்பாண அரசாங்க கையேடுகளில் ஆவணங்களில் காணக் கூடியதாக இருக்கின்றது எமது கிராமத்தவர் தென் இலங்கை மண்ணில் பல நகரங்களில் பிரபலமான வர்த்தக செல்வந்தர்களாக வலம் வந்தார்கள் வேறு வழியில் பல அறிஞர்கள் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளுக்கு சென்று நல்ல உயர் தொழில்களில் உழைத்து வந்தார்கள் இந்த இரு பகுதியினரும் இணைந்து சைவ சமயத்தை வளர்த்தெடுக்க பல பிரமாண்டமான கோயில்களை கட்டத் தொடங்கினார்கள் அந்த கோயில்களில் பெரும் பொருட் செலவில் மக்களை ஈர்க்கும் பொருட்டு திருவிழாக்களை நடத்தி வந்தார்கள் இந்த அடிப்படை அத்திவாரத்தில் தான் எமது ஊரின் சைவ சமய மறுமலர்ச்சி மிளிரத் தொடங்கியது விழாக்களை நடத்தி வந்திருப்பது வியப்பானது
1960 இல் தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்பட்ட அநியாயங்களை கண்டு அகில இலங்கை குருமார்களின் ஆதரவோடு கழட்டி பிள்ளையார் ஆலயம் மூன்றில் மூன்று நாட்களாக கோடிஅர்ச்சனை உடன் கூடிய மகாயாகம் நடைபெற்றது 600க்கும் மேற்பட்ட அந்தணர்கள் கூடி நடைபெற்ற இந்த மகா யாகத்தின் பின்னர் அந்தண பெருமக்களும் அடியார்களும் கால்நடையாக யாழ் கச்சேரி வரை யாத்திரையாக நடந்து சென்று தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர் இது அந்த காலத்தில் தமிழ் இனத்துக்கு ஆற்றிய பெரும் பணியாக கருதப்பட்டது
குலதெய்வங்கள் என்றும் ஆதி மூலக்கடவுகள் என்றும் குறிப்பிடப்படும் நாச்சிமார் வைரவர் ஐ யனார் வீரபத்திரர் காத்தவராயர் காளியம்மன் பே ச்சியம்மன் மாரியம்மன் துர்க்கை அம்மன் நாயம்மாள் பட்டி அம்மன் முருகன் ஆலயங்களே ஆரம்பத்தில் இருந்ததாக வரலாறு உண்டு அவை நாளடைவில் மாற்றமடைந்து புதிய பேர்களில் அழைக்கப்பட்டன அல்லது மருவி நின்றன சில ஆலயங்களில் மூலவர் பெயர்களை கூட மாற்றி இருக்கின்றார்கள் முக்கியமாக ஊரதீவு ஐ யனார் கோவில் பாணா விடை சிவன் கோவில் என்றும் மடத்து வெளி நாச்சிமார் கோவில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் வல்லன் இழுப்பண்டை நாச்சிமார் கோவில் முருகன் கோவில் என்றும் கண்ணகி அம்மன் கோவில் ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் என்றும் பேச்சி அம்மன் கோவில் ஜெகன் மாதா மனோன்மணி அம்பாள் கோவில் என்றும் பெருங்காடு சிவன் கோவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் என்றும் கலட்டி பிள்ளையார் கோவில் வர சித்தி விநாயகர் ஆலயம் என்றும் தல்லையபற்று முருகன் கோவில் சங்கரமூர்த்தி முருகமூர்த்தி கோவில் என்றும் காளி கோவில் காளிகா பரமேஸ்வரி ஆலயம் என்றும் இன்னும் சில பிள்ளையார் ஆலயங்கள் வீரகத்தி விநாயகர் ஆலயங்கள் என்றும் மாறிவிட்டன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக