வியாழன், 28 ஆகஸ்ட், 2025

 புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய தீர்த்தக் கேணியான *சரவண பொய்கை*யை கடந்த பத்து வருடத்துக்கு முன்பாக இராசதுரை பாலகுகன் (குத்துவில் செல்லப்பா) அவர்களின் நிதிப் பங்களிப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதனை அப்போதைய ஆலய தலைவர் திரு.அருணாசலம் சண்முகநாதன் (கண்ணாடி ஐயா) அவர்களினால் இருபத்தைந்து இலட்சம் முடியுமென தெரிவிக்கப்பட்டு குடும்ப சகோதரர்களின் பங்களிப்பில் இதனை செய்கிறோமெனக் கூறி ஆலய தலைவர் திரு.அருணாசலம் சண்முகநாதன் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டு, பின்னர் ஏற்பட்ட இடர்கால (கொரோனா) அனர்த்தம், மற்றும் தவிர்க்க முடியாத காரணங்கள், ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் காலமாக இழுபட்டு தொய்வு நிலைக்கு சென்றது.
தற்போது மீண்டும் அதனை சீரமைக்கும் பணியில் வேலைப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுத்து கட்டியமைக்கும் முடிவில் திடகாத்திரமாக செயல்பட்டு வருகிறேன், இப்போது வரை சுமார் ஒருகோடியே எழுபது இலட்சம் வரை செலவழிக்கப்பட்டு வேலைகள் மும்மரமாக நடைபெறுகிறது.
இம்முறை திருவிழாவுக்கு முன்னர் சகல விடயங்களும் பூர்த்தியாகி ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம். தீர்த்தக்கேணியின் கட்டுமானப் பணி முழுமையாக முடிவுற்றதும் செலவு விபரமும் தெரிவிக்கப்படும். நன்றி..
இவ்வண்ணம்..
வயலூர் முருகன் ஆலய தீர்த்தத் திருவிழா உபயகாரர்,
இராசதுரை பாலகுகன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக