திங்கள், 2 பிப்ரவரி, 2026

ஆலய அமைப்பும் தொழுகின்ற விதிமுறைகளும்

 ஆலயம் என்பது ஆன்மா லயப்படுவதற்குரிய இடம் அதாவது ஆணவமலம் அடங்குவதற்குரிய இடம் கடவுள் என்னும் பெயர் மனம்; மொழி; மெய் ஆகியவற்றை கடந்து நிற்பதாகும் :ஆலயங்களில் விதிக்கப்பட்ட ஆலய அமைப்பு இரண்டு வகைப்படும் :ஒன்று நம் உடல் அமைப்பை ஒட்டியது: மற்றொன்று நம் இதய அமைப்பை ஒட்டியது:: திருத்தலங்கள் நம் உடம்பு போல் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை சீக்கிரம் சரீரம் பிரச்சாரம் என்பர்: இதனையே திருமூலர்

;; உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்

தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்

கள்ளப்புலனைந்தும் காளாமணி விளக்கே ;;

என்கிறார் :

ஆகம விதிப்படி ஆலயங்கள் கர்ப்பகிரகம் ஒன்று முதல் ஐந்து பிரகாரங்களுடன் கூடிய ராஜகோபுரம் ;நந்தி; பலிபீடம்; கொடிமரம் ;யாகசாலை முதலியவற்றுடன் அமைந்துள்ளன பிண்டமாகிய உடலில் தலை; கழுத்து: மார்பு: நா:டி பாதம் என 5 பிரிவுகள் உண்டு :புருஷ வடிவாக விளங்கும் சிவாலயத்தை நம் உடலோடு ஒப்பிடும் போது முதலாவதாக கர்ப்பகிரகம் தலை ஆகவும் இரண்டாவதாக அர்த்த மண்டபம் கழுத்தாகவும் மூன்றாவதாக மகா மண்டபம் மார்பாகவும் நான்காவதாக யாகசாலை நாடியாகவும் ஐந்தாவது கோபுரம் பாதங்களாகவும் குறிப்பிடப்படுகின்றன: நமது உடலில் ஆலயமாக உடலும் கோபுரமாக வாயும் நந்தியாக நாக்கும் துலஜஸதம்பமாக அண்ணாக்கும் தீபங்களாக பஞ்சேந் திரியங்களும் கர்ப்பக்கிரகமாக இதயமும் சிவலிங்கமாக உயிரும் காட்சியளிக்கின்றன: உடலில் தன்மயகோசம் பிராணமய கோஷம் ;மனோமய கோசம்;விஞ்ஞானமய கோசம் ;ஆனந்த மயகோஷம் போலவும் தூலசரீரம்; சூக்கும சரீரம் ;குணசரீரம்; கஞ்சுகசரீரம் கிராணசரீரம் போல ஐந்து பிரகாரங்களும் ஐந்து சபைகளும் உள்ளன: உடலில் உள்ள ஆதிரங்கள் போல கர்ப்ப கிரகம் அர்த்தமண்டபம் முதலியன உள்ளன:; மேலும் இவ்வாலயங்களில் பொதுவாக ஏழு வகைப் பொருட்களால் ஆனது :நம் உடலும் தோல் :இரத்தம்; நரம்பு போன்ற ஏழு வகை தாதுக்களால் ஆனது :




ராஜகோபுரம்

----------------ä

பெரிய கோவில் ஒன்று அமைத்து அதற்கு வாயில் ஒன்று வைக்கப்படுகின்றது :அந்த வாயிலுக்கு மேல் உயர்ந்த கோபுரம் ஒன்று அமைக்கப்படுகின்றது: கோவிலில் உள்ள ஏனைய கோபுரங்களை விட ராஜகோபுரம் மிக உயர்ந்தது :நெடுந்தொலைவில் இருந்து பார்த்தால் கம்பீரமாக காட்சி அளிக்கும் இது தூல லிங்கமாகும் :வெகு தொலைவிலையே கண்ணீல் படும்போது தெய்வ சுருபமாகவே எண்ணி வணங்குவர் :கோபுர தரிசனம் கோ டி புண்ணியம் என்றும் கோபுர தரிசனம் பாவ விமோசனம் என்றும் சொல்லப்படுகின்றது :ராஜ கோபுரத்தில் பல்வேறு வகை சிற்பங்கள் தெய்வ வடிவங்கள் :: பட்சிகள் ;மிருகங்கள் ;:புராண இதிகாச வரலாறு அமைப்புகள் ;மானிட வடிவங்கள் ;மெய்யடியார்கள் மற்றும் ஏனைய வடிவங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்; இதன் தத்துவார்த்தம் யாதெனில் பிரபஞ்ச அமைப்பில் இவை யாவுக்கும் இடம் உண்டு என்பது கோட்பாட்டு விளக்கம் :விலங்கினம் ;மக்களினம் ;; தேவர் இனம் ஆகிய எல்லோரும் பிரபஞ்சத்தில் உள்ளார்கள்: அண்டத்தில் இதுதான் உள்ளது இது இல்லை என்று எவராலும் பாகுபடுத்த முடியாது என்ற கோட்பாட்டை ராசு கோபுரம் விளக்கின் நிற்கிறது :ராசுகோபுரத்தின் மேல்நிலை பொதுவாக ஒற்றைப்பட எண்ணில் அமைந்திருக்கும்: 3 ;5; 7; 9; 11 என்றவாறு அதில் அமைந்துள்ளது நிலைகள் ஒன்றன் மேல் ஒன்றாக பெருகிக் கொண்டே போகும் ராசகோபுரத்தின் மூன்று நிலைகள் ஆவன சாக்கிரம் ;சொப்பனம் ;சுளுத்தி என மூன்று அவத்தைகளை குறிக்கும் ;ராச கோபுரத்தின் ஐந்து நிலைகள் ஐம்பொறிகளை குறிக்கும்; ராசகோபுரத்தில் நிலைகள் ஐம்பொறிகளோடு மனம் புத்தி இரண்டும் சேர்ந்து குறிக்கப்படுகின்றன: ராசகோபுரத்தின் ஒன்பது நிலைகள் இந்த ஏழினோடு சித்தம் தருமகாரம் என இரண்டும் சேர்ந்தது ஆகும் :பஞ்சேந் திரியங்களை கொண்டும் மனம் புத்தி முதலியானவற்றைக் க் கொண்டும் புற உலகை அறிகின்றோம் :புற உலகை அறிகின்ற செயலை அப்படியே நிறுத்திவிட்டு மனதை துணையாக கொண்டு பரம்பொருளிடத்திலும் பயணம் போக வேண்டும்எ ன்னும் கோட்பாட்டை ராசகோபுர வாயில்கள் வழியே பண்ணும் பிரவேசம் நமக்கு விளக்கி காட்டுகிறது



பலிபீடம் 

--------------

 ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்ததும் நம் கண்ணுக்கு புலப்படுவது பலிபீடம் அதன் அருகில் சென்று விழுந்து வணங்கி வழிபடும் இடத்தில் மனதில் விழும் தூய எண்ணமே மிக முக்கியமானது -ஒருவரின் கீழான எண்ணங்கள் இச்சைகள் அனைத்துமே அவன் அவ்வாறு வணங்கும் போது பலிபீடத்தில் பலி கொடுக்கப்படுகின்றது. -இவ்வாறு பலியிட்ட பின் தூய சிந்தனை மேலான எண்ணத்துடன் அவன் வேண்டும் .அங்கு மனிதத்தன்மை வாய்ந்த மனிதன் எழுந்திருக்கின்றான் என்ற எண்ணம் வலிமை பெறுகின்றது .இந்த எண்ணத்தின் சக்தி அவன் புதிய ஒரு பிறவி எடுத்ததற்கு சமனாகின்றது. பலிபீடம் பத்திரலிங்கம் ஆகும் ö


கொடிமரம்

--------------------

பலிபீடத்தை அடுத்துள்ளது கொடிமரம் .இது கோபுரம் அல்லது விமானத்தைப் போன்றது. மேலாக நந்திக்கு எதிரிலோ அல்லது பின்னலோ சில கோயில்களில் காணப்படும். இதுவே ஸ்தம்பம், பலிபீடம், நந்தி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் மூலவரை நோக்கி இருக்கும். உயர்ந்தும் கொடிமரம் இவ்வாறு நேராக இருக்கிறதோ அதேபோல் உடல் நேராக இருக்க வேண்டும். இதன் உயரம் விமானத்துக்கு சமமாகவோ அல்லது அதன் முதல் மாடி போன்ற பகுதிகளுக்கு சமமாகவோ இருத்தல் வேண்டும் .இதன் அதிதேவதை சிவன் .ஆகவே இது சிவனைக் குறிக்கும். இதனை மூன்று பாகங்களாக பிரிக்கலாம். சதுரமான அடிப்பகுதி, எண்கோண வீதி போன்ற அமைப்பு. ,உருளை போன்ற தடித்த உயரமான மரம்..சதுரமான அடிப்பகுதி பிரம்மாவையும் ,ண் கோண வீதி போன்ற பகுதி விஷ்ணுவையும் ,உருளை போன்ற தடித்த உயரமான மரம் உருத்திரனையும் குறிக்கும். ன ஆகமங்கள் சொல்கின்றன .கொடிமரத்தின் ஏனைய பாகங்களான மூன்று குறுக்கு கட்டைகள் இச்சாசக்தி ,கிரியாசக்தி ,ஞானசக்தி குறிக்கும். . இந்த குறுக்குத் தண்டுகள் சூரியன் சந்திரன் ஆக உள்ளன..கொ டியேற்றக்கயிறு =அணுக்கிரகசக்தி, கொடி= வாயு, கொடியில் வரையப்படும் நந்தி= ஆன்மா கும். த்ஸ்தம்பம் சைவாகங்களில் குறிப்பிடும்போது மூன்று பொருட்களான பதி ,சு,பாம் என்பதாகி உள்ளன..பத்தி இவாறு பாசத்தை ஒழித்து இறையருளுடன் சிவனை அடைய முடியும் என்பதை உணர்த்துகின்றது.


யாகசாலை

--------------------------

இது 36 தத்துவ ஸ்வரூபமாகவும் சிவபெருமானது அட்ட மூர்த்தி வடிவமாகவும் கூறப்படும்.தியாகசாலையில் 9 குண்டங்களில் அக்கினி வளர்க்கப்படும் .அவை நாற்கோணம் ,முக்கோணம் , அர்த்தசாஸ்திரம் முதலிய வடிவங்களில் காணப்படும் ,.குண்டங்கள் சுற்றி பசு ந்தரப்பைகளை பரப்பி ஆல் , அரசு முதலிய சமித்துகளை குண்டத்தில் கடைந்தெடுக்கப்பட்ட சுத்தமான அக்னி கொண்டு அதற்குரிய மந்திரங்களை சொல்லி அதில் தெய்வங்களை மனதில் தியானித்து சிரிச்சுருவம், சிருக்கு, சிருவம் என்னும் கருவிகளை கொண்டு நெய் சொரிந்து தீ வளர்க்கப்படும் .மந்திரம் ,கிரியை ,பாவனை என்ற மூன்றாலும் வழிபாடு நிகழும். ஓம குண்டலத்தில் இருந்து எழுகின்ற புகையும் வேதம் , சிவாகமங்கள் ,திருமுறை ஒலிகளும் அன்பர்களின் நல்லெண்ணங்களும் எங்கும் வியாபிக்கின்ற இறைவனது அருட்சத்தி தூண்டி உலகெங்கும் பரவச் செய்து நன்மைகளை உண்டு பண்ணும்


நந்தி

------------------------

ஒரு ஆலயத்தில் சிவலிங்கம், நந்தி , பலிபீடம், கொடிமரம் ஆகிய வரிசையில் இருக்கக் காணலாம். நந்தி கர்ப்பக்கிரகத்தில் உள்ள சிவனை பார்த்தவாறு அமர்ந்திருக்கிறது .இது சிவனின் வாகனம் .வாகனம் எதுவாயினும் அது ஜீவான் மாவைக் குறிக்கிறது. மூலப் பொருளான இறைவனை பார்த்த வண்ணமாக உள்ளது.ஜீவான்மாவின் குறிக்கோள் இறைவனை சென்றடைய வேண்டும் என்பதுதான் .அந்தக் கோட்பாட்டை விளக்கும் பொருளாக நந்தி பெருமான் சிவனை நோக்கி இருக்கின்றார் அல்லது சிவன் ஆலயம் அல்லாத கோவில்களில் நந்தியாக மயில், எலி, சிங்கம், நாய் என்பன அமைந்திருக்கும் ..ஆகவே பக்தர்கள் வலம் வரும் போது நந்திக்கு குறுக்கே செல்லாமல் அதை சுற்றித்தான் வலம் வர வேண்டும்: இந் நந்தியின் உத்தரவு பெற்று கர்ப்பக்கிரகத்தில் எழுந்தருளி இருக்கும் சிவனை நாம் தரிசனம் செய்ய வேண்டும் என்பதே விதி :

பிரகாரம்

------------------

ஆலயத்தில் ராசகோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் பிரகாரங்கள் உள்ளன: ஒவ்வொரு ஆலயத்திலும் உள்ள பிரகாரங்கள் அவ்வாலய வரலாற்றையொட்டி பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன:: இத்தகைய பிரகாரங்களின் மதில் சுவர்கள் இறைவனை மறைத்துக் கொண்டிருக்கின்றன: எந்த திசைகளில் இருந்தும் இறைவனை காண முடிவதில்லை :பிரதான வாயில் எனப்படும் ராசகோபுரம் வழியாகத்தான் உள்ளே சென்று நாம் இறைவனை வழிபட முடிகிறது: ஐந்து பிரகாரங்கள் உள்ள கோயில் ;மூன்று பிரகாரங்கள் உள்ள கோயில் ;ஒரே ஒரு பிரகாரம் உள்ள கோயில் என்று ஆலயங்களை காணக் கூடியதாக இருக்கும்: ஐந்து பிரகாரங்கள் அன்னமயம் ; பிராணமயம் ;மனுமயம் ;விஞ்ஞானமயம் ;ஆனந்தமயம் எ ன்னும் ஐந்து வித கோஷங்களை குறிக்கும்:மூன்று பிரகாரங்கள் என்றால் துருல ; சூட்சும ; காரணம் என்னும் மூவகை உடம்புகளை குறிக்கும் :கோயிலில் வழிபடுவோர் மூன்று முறை ;ஐந்து முறை பிரகாரங்களை சுற்றி வலம் வர வேண்டும் என்ற விதிமுறை மூவகை உடம்பையும் ஐந்துவித கோஷங்களையும் கடந்து இறைவன் விளங்குகிறார் என்பதை தெளிவுபடுத்துகின்றது:



பிரதட்சணம் செய்தல் /வலம் வருதல்
ஆலயத்தில் உள்ள பிரகாரங்களில் பிரதட்சம் செய்தால் உண்டாகும் பலன்கள் பின்வருமாறு .
காலையில் வலம் வந்தால் நோய் நீங்கும் .பகலில் வலம் வந்தால் விருப்பம் அளிக்கும் .மாலையில் வலம் வந்தால் பாவங்கள் தீரும். அர்த்த சாமத்தில் வ ல ம் வந்தால் மோட்ச சித்தி கிடைக்கும் .விநாயகருக்கு ஒரு முறையும், சூரியனுக்கு இரண்டு முறையும் ,சிவனுக்கு மூன்று முறையும் வம் லாம். சாத்திர ரீதியாக அனுமதிக்கப்பட்டிருக்கும் (விதிபிரமாணப்படி ) மணி அடிப்ப து, வேதகோஷம் ,தேவாரம். மேளம் என்று குறிக்கப்பட்டுள்ளதாது ஆலயம் அமைதியின் இடம் அடிப்படையில் இதனை உணர்வுடன் புரிந்து கொள்ள வேண்டும் இந்த த்துவம் ஒவ்வொருவரும் அறிய வேண்டியதுண்டு .
மூலவர்
--------------
மூலவர் என்பவர் கர்ப்க்கிரகத்தில் உள்ள சிவலிங்கம் ஆகும் .இது வெவ்வேறு ஆலயங்களில் வேறுபடும் .முருகனைக் குறிக்க வேலாயுதமும், சிவனை, அம்மனை குறித்த கோயில்களில் சூலமும் காணப்படுவதுண்டு. மூலவரை தரிசிக்க கருவறை வாயில் எழுந்துள்ளிருக்கும் துவாரபாலகர்களிடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும் .லிங்கம் என்பதற்கு குறி என்று பொருள். குறி என்றால் அடையாளம் .அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம் என்றும் அவ்வாறு ஒடுங்கிய அப்பொருள் உள்ளவன் மீத் தோன்றுவதற்கு உரிய இடம் எனவும் பொருள் கூறுவர் .காண முடியாத இறைவனை காணுவதற்குரிய அடையாளமே சிவலிங்கமாகும்.
மகா மண்டபம்
------------------
நந்தியின் அருகில் நின்று மூலவரை கண்டு வணங்கிய அடியவர் அடுத்துள்ள மகா மண்டபத்திற்குள் செல்கிறார் .ஆசாரியர் குருக்கள் எனக் கூறப்படும் அவர்கள் உள்ள இடம் மகா மண்டபம். ஆலய வழிபாடு புரிவோர் தம்முடன் தேங்காய், வெற்றிலை, பாக்கு,பழம் ,கற்பூரம் ,, பூக்கள் ஆகியவற்றை , எடுத்துச் செல்ல வேண்டும் என்பது ஆகம விதி .இவற்றை எடுத்துச் செல்லும் அடியவர் மகா மண்டபத்தில் வீற்றிருக்கும் ஆன்மலிங்கமாகிய குருக்களிடம் அளிக்க வேண்டும் .குருக்கள் இவற்றைக் கொண்டு செய்யும் ஆராதனையும் ஓர் தத்துவத்தை விளக்கும். இங்கே ஒரு விளக்கம்கொடுக்கப்படுகிறது .அது தேங்காய் வழிபட செல்லும் ஆன்மாவை குறிக்கும். இதில் உள்ள மூன்று கண்கள் மும்மலங்களான ஆணவம் ,கன்மம் ,மாயையைக்குறிக்கும் .தேங்காய் ஓடு ஆன்மாவின் பாவங்களை குறிக்கும் .பாவங்களின் கடினத் தன்மையை எடுத்துக் கூறுகின்றது. தேங்காய் பருப்பு ஆன்மாவை குறிக்கும் .தேங்காய் உடைக்கும் கருவி ஆன்ம விடுதலைக்கு தேவையான இறைவனது திருவருளைக் குறிக்கும் .பழங்கள் அடியவரின் நல்வினை பலன்களை குறிக்கும்.கற்பூரம் இறைவனோடு இரண்டற கலக்கும் பக்குவம் வாய்ந்த ஆன்மநிலையை உணர்த்தும்.


எமது ஊரின் கோவில் திருவிழாக்கள் ok

 து மக்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து செல்வதற்கு முன்னைய காலத்தில் கூட பிரம்மாண்டமாக இந்த கோயில்களை கட்டி பெரும் செலவில் திருவிழாக்கள் செய்து வந்திருப்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது .இந்த விழாக்களை செய்கின்ற உபயகாரர்கள் தென் இலங்கையின் நகரங்களின் பேரை அடைமொழியாக கொண்டு பெயர் பெற்று விளங்குபவர்கள் .திருவிழாக்களை செய்யும் போதும் அந்த அடைமொழி பேர்களோடு மக்கள் அவர்களை அழைத்து மகிழ்வர்.அதாவது இந்த நகரத்து இந்த முதலாளியின் இன்றைய உபயம் என்று பெருமையாக பேசிக்கொள்வார்கள்...இந்த உபயக்காரர்களிடையே பெரும் போட்டி இருக்கும். யார் எத்தனை கூடடம் மேளம் பிடித்தது ,யாரும் அழைத்து வராத நிகழ்ச்சிகளை நான் அழைத்திருக்கிறேன் .நான் பிடித்த இன்னிசைக்குழு தான் யாழ் மண்ணிலேயே பிரபலமானது .,இந்த நடனக்குழு சிறப்பாக ஆடியது .இத்தனையும் திருவிழாவுக்கு தான் பெரும் மக்கள் கூடடம் வந்தது , விடிய விடிய நிகழ்ச்சிகள் நடந்தது எனது திருவிழாவில் தான் .என்றெல்லாம் ஆரோக்கியமான போட்டிகள் தான் அவை .

ஊரதீவு ஐயனார் கோவில், மடத்துவெளி வயலூர் முருகன் mகண்ணகி அம்மன் .பெருங்காடு சிவன் கோவில், பெருங்காடு கந்தசாமி கோயில் ,பெருங்காடு மாரியம்மன் கோவில் ,இருப்பிட்டி காளி கோவில் ,கொம்மாபிட்டி பிள்ளையார் கோவில். இருப்பிட்டி பெரியபுலம் பிள்ளையார் கோவில்,அரியநாயகன் புலம் பிள்ளையார் கோவில் ,குறிகட்டுவான் பேச்சியம்மன் கோவில் ஆகிய பெரிய ஆலயங்கள் மட்டும் தான் முன்பு பதினொரு நாள் திருவிழாக்களை நடத்தி வந்தன. இவற்றோடு இப்போது நாகதம்பிரான் கோவில் ,நாச்சியம்மன் கோவில், காத்தவராயன் கோவில் ,க லட்டி பிள்ளையார் கோவில் ,சந்தையடி மூத்த விநாயகர் கோவில் ,இருப்பிட்டி பட்டை அம்மன் கோவில் என்பனவும் 10 நாள் திருவிழாக்களை நடத்த தொடங்கி இருக்கின்றன. இந்தக் கோவில்களில் முன்பு வருடத்தில் ஒரு நாள் விசேஷமான பெரும் திருவிழா நடைபெறுவதுண்டு,,

எமது ஊரின் நடைபெறும் திருவிழாக்களிலேயே பெரிதாகப் பேசப்படும் ஒரு திருவிழா என்றால் அது கந்தசாமி கோவில் பூங்காவனத்திருவிழா தான் ..சிகரம் அமைக்கப்படுவது இங்கு தான் .கோவில் நுழைவாயில் முன்றலில் மிக உயரமான ளவில் சிகரம் பொருத்தப்பட்டு ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் . அங்கிருந்து நீளமாக தீர்த்தக்கேணி வரையிலும் பந்தல் போன்று இழுக்கப்பட்டு முடிவில் நாற்சதுர மேடை அமைக்கப்பட்டிருக்கும் .இதனை ஆயிரம் கால் மண்டபம் என்பார்கள் ..அருகிலேயே சுவாமி வீதிவலம் வரவென பக்கவாட்டுக்கு மூன்று அடுக்காக பாரிய அளவிலான பூந்தண்டிகை நிறுத்தப்பட்டிருக்கும் .இந்த பூங்காவனத் திருவிழாவில் கேளிக்கை ஆடம்பர சினிமாப்பாடல் நிகழ்ச்சிகள் மிகவும் தூக்கலாக இருக்கும்..ஆரம்பத்தில் மேளக்கச்சேரிகள் பல கோஷ்டிகளாக வந்து வாசிக்க தொடங்குவார்கள் .எட்டுக்கூடட மேளங்கள் ஒன்றாக ஒருசேர அமர்ந்து வாசிக்க பின்பாதியில் சினிமாப்பாடல்கள் வரும்போது களைகட்டும் பூங்காவனம் .வில்லிசை போன்றவை தொடரும் .அடுத்து சுவாமி .அழகிய பூந்தண்டிகையில் ..எழுந்தருளி வீதியுலா வந்து வடக்கு வீதியில் நிறுத்தப்படும். அதிகாலை 2-3 மணியைதாண்டிவிடும் .சதுர்க்கச்சேரிக்கென்றே வீட்டில் இருந்து சந்தோசமாக புறப்பட்டு வந்த இளம்பராயத்தினர் சிறுவர்கள் உறங்கிவிடுவார்கள். பெற்றோர் அவர்களை தட்டி எழுப்பி பார்த்து ரசிக்க வைப்பார்கள் . .மக்கள் கோவில் மண்டபத்திலும் ,தரையிலும் ,தீர்த்தக் கேணி படிகளிலும், பிரதான வீதியிலும் இருந்து கண் விழித்து ரசித்து மகிழ்வர். வடக்கு வீதியில் சப்ரத்தை நிறுத்தி வைத்து சதுர்க்கச்சேரி நடத்திக் கொண்டிருக்க முதலாவது பேருந்து நான்கரை மணிக்கு வரும்போது வீதியிலிருந்து எழுந்து இடம் கொடுப்பது வேடிக்கையாக இருக்கும் .சதுர்க்கச்சேரி என்னும் நடன கோஸ்டிகளில் அம்பிகை நடன குழு ,வேணுகோபால் நடனக்குழு என்பவர்கள் ஞாபகத்தில் நிற்கிறார்கள் ,

அடுத்ததாக எமது ஆலயங்களில் விழாக்களில் களை கட்டும் நாடகங்கள் என்று நோக்கினால் இருப்பிட்டி கொம்மாபிட்டி பிள்ளையார் கோவில் முதலிடத்தில் இருக்கும்..அடுத்ததாக குறிகட்டுவான் பேச்சி அம்மன் ஆலயம் நாடகங்களுக்கு பேர் போனது .முதலிடத்தில் இருக்கும் நாடகங்கள் வி ..வைரமுத்துவின் சம்பூர்ண ராமாயணம் .ஹரிச்சந்திரா ,அல்லி அர்ச்சனா போன்றவை தான் .

.எல்லா ஆலயங்களிலும் விசேஷ மேளக் கூட்டங்கள் தவிர்க்க முடியாதிருந்தன எத்தனை கூட்டம் மேளங்களை எத்தனையாம் திருவிழாக்காரர் அழைத்து வந்தார் என்பதை வைத்துத்தான் உபயகாரர்களின் மதிப்பு அல்லது செல்வந்தம் அளவிடப்படுகின்றது .இந்த மேள கூட்டங்கள் வரிசையில் இடம் பிடித்த பிரபல்யமான தவில் நாதஸ்வர விற்பன்னர்களாக இணு வில் மண்ணைச் சேர்ந்த என் ஆர் கோவிந்தசாமி ,என் ஆர் சின்னராசா, என் ஆர் சந்தானகிருஷ்ணன் ,கே. பத்மநாதன் ,அளவெட்டி தட்சணாமூர்த்தி .பழனி .கணேசன் ,பஞ்ச மூர்த்திகான மூர்த்தி, பஞ்சாபிசேகன் போன்ற மேதைகள் திகழ்ந்து வந்தனர் .உள்ளூர் மேளங்கள் அல்லது கோவில் மேளங்கள் என்றும் சில கோஷ்டிகள் கோலோச்சின திருவிழா நடக்கும் அத்தனை நாட்களிலும் இவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி இருந்து எல்லா திருவிழாக்களிலும் தங்கள் பணியினை ஆற்றுவார்கள் .இந்த வரிசையில் கூட எமது மண்ணில் காளமேகம் ,பெரியநாயகம், சுப்பையா ,எஸ்.எஸ்.ஆனந்தன் குழுவினர் இடம் பிடித்திருந்தார்கள் .கண்ணகி அம்மன் ஆலயம். கொம்மாபட்டி பிள்ளையார் ஆலயம். கந்தசாமி கோவில். ஊர தீவு ஐயனார் கோவில் ஆகிய ஆலயங்களின் உபயகாரர்கள் தான் பெரும்பாலான திருவிழாக்களில் அதிக அளவிலான மேள கூட்டங்களை அழைத்து வந்து பிரமிக்க வைப்பார்கள் .கண்ணகி ஆலயத்தின் ராஜகோபுரத்தையொட்டி வடக்கு பக்கமாக மேடை அமைக்கப்பட்டிருக்கும் .இதில் தான் மேளக்கச்சேரிகள் , நடனக்கச்சேரிகள் ,இன்னிசைக்கச்சேரிகள் நடைபெறும்.தேதென்பக்கமாக கடலில் இருந்துஇதமான குளிர்ந்த காற்று வீச வடக்கிலும் கிழக்கிலும் சொரிந்த வெண்மணல் விரிப்பில் அமர்ந்து பக்தர்கள் நிகழ்ச்சிகளை ரசிப்பதே அலாதி சந்தோசம் தான் .. கொம்மாபிடடி பிள்ளையார் ஆலயத்தில் முன்பகுதியில் மரங்களின் கீழே மேடை போடப்பட்டிருக்கும் .

இந்த திருவிழா நிகழ்ச்சிகளில் அடுத்து இடம் பிடிப்பது இன்னிசை கச்சேரி எனப்படுவது .இந்த இன்னிசை கோஷ்டிகளில் மிகவும் பிரபலமான ஐந்து கோஷ்டிகள் தான் மாறி மாறி எல்லா கோயில்களிலும் இடம்பிடித்து வந்தன .இன்னிசை கச்சேரிகள் கந்தசாமி கோவில், கண்ணகி அம்மன் கோவில் ,ஹரி ஹர புத்திர அய்யனார் கோவில் ,ஊரதீவு ஐயனார் கோவில் ஆகிய ஆலயங்களில் தான் அடிக்கடி நடைபெறுவதுண்டு . இந்த இன்னிசை மேடைகளில் எமது ஊரின் உள்ளூர் பாடகர்களும் வாய்ப்பு கேட்டு தமது திறமைகளை வெளி கொணர்வார்கள்இந்த இன்னிசை குழுக்களின் வரிசையில் பிரபல்யமான ரங்கன் ,கண்ணன் ,இரட்டையர் ,ராஜன், கதிர்சுந்தரலிங்கம், ஈழத்து சௌந்தர்ராஜன் போன்ற குழுக்கள் பிரகாசித்திருந்தன. 70 களின் தொடக்கத்தில் இலங்கையில் புகழ்பெற்ற பொப் இசை பிரபல்யமான நிலையில் அந்தப் பொப்பிசை பாடகர்களும் இந்த இன்னிசை கச்சேரிகளில் இடம் பிடித்து வந்ததுண்டு .இவர்களில் ஏ .இ.மனோகரன், நித்தி. கணகரத்திலும், முத்தழகு போன்ற கலைஞர்கள் முக்கியமானவர்கள் -இவர்களிடையே ஆங்காங்கே எமது ஊரின் கலைஞர்களான பொன் சுந்தரலிங்கம் ,பொன் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் சங்கீத இசைக்கச்சேரிகளும் வரவேற்கப்பட்டன.


அந்த வகையில் இன்னும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி என்றால் வில்லிசை கச்சேரி அல்லது வில்லுப்பாட்டு எனலாம் வில்லிசை குழுக்களில் முதன்மையானதும் வழிகாட்டியாகவும் இருந்த எங்கள் மண்ணுக்கு சொந்தக்காரர் திருப்பூங்குடி ஆறுமுகம் அவர்கள் வரலாறு படைத்துச் சென்ற ஒரு கலைஞர் .பின் நாட்களில் இளைஞர்களை சிறுவர்களை கவர்ந்திழுத்த நகைச்சுவை கூடியதான வில்லிசையில் முதலாமவர் சின்னமணி வில்லிசை குழு என நாமம் கொண்ட அச்சு வேலி கணபதிப்பிள்ளை ஆவார் .இவரது வில்லிசை பெரும்பாலும் எல்லா ஆலயங்களிலும் கூடுதல் விழாக்களிலும் நிகழ்ந்திருக்கிறது என்பது வரலாறு .இன்னும் சபா சதாசிவம் குழு , நாச்சிமார் கோவிலடி ராஜன் குழுவினர் கூட எமது ஆலயங்களில் வில்லிசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருந்தார்கள்.


எமது ஆலய திருவிழாக்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் அடுத்த இடத்தில் இருப்பது கதாபிரசங்கம் அல்லது கதாகலாஷபம் ஆகும். இவை இளைஞர்கள் சிறுவர்களைப் பொறுத்தவரை விரும்பப்படாதவை .ஆனால் பெரியவர்கள் ,முதியோர்களை மகிழ்விக்கவும் ஆன்மீக நெறிகளை பரப்பும் வண்ணம் இடம் பெறுபவை .இந்த நிகழ்ச்சிகளில் தனி ராஜ்ஜியம் அமைத்து நடத்தி வந்தவர் நல்லூர் ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ மணி ஐயர் எனப்படுபவர். இவருக்கு அடுத்ததாக குருடன் என்று செல்லமாக அழைக்கப்படும் திராச. தனி மனித பிரசங்கவாதி. சிறு சிறு சுய இசை கருவிகள், தகங்கள் என தாளங்களை வைத்துக்கொண்டு தனித்து கதாகாலட்சோப நடத்தக்கூடிய வல்லமை படைத்தவர்.


மடத்துவெளி வயலூர் முருகன் கோவில் திருவிழாக்களில் எமது மண்ணின் சங்கீத இசைக் கலைஞர்களான பொன் சுந்தரலிங்கம் பொன் சுபாஷ் சந்திர போஸ் சகோதரர்களின் இன்னிசை கச்சேரி மேடை ஏறி இருக்கிறது வயலின் வித்துவான் ராதாகிருஷ்ணன் அவர்களின் வயலின் கச்சேரியும் இந்த ஆலயத்தில் திருவிழா ஒன்றில் நிகழ்ந்திருப்பது இருப்பது குறிப்பிடத்தக்கது பத்து நாள் திருவிழா என்பது அப்பால் ஓரளவு பெரிய ஆலயங்களில் வருடத்தில் ஒரு நாள் திருவிழா விமர்சையாக நடைபெற்றிருக்கிறது மடத்து வெளி நுழைவாயில் பிள்ளையார் கோவில் திருப்பெருந்துறை நாகதம்பிரான் கோவில் வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில் வல்லன் இழுப்பண்டை நாச்சிமார் கோவில் மாவு திடல் காத்தவராயன் கோயில் வீரமலை நாயம்மா கோயில் முருக்கடி ஆதிவைரவர் கோவில் சந்தையடி பிள்ளையார் கோவில் இருபிட்டி க லட்டி அம்மன் கோவில் இருப்பிட்டி பட்டையர் அம்மன் கோவில் ஊரதீவு பெத்தப்பு முருகன் கோவில் கேரதீவு ஐயனார் கோவில் போன்ற கோள்களில் வருத்தத்தில் ஒருமுறை ஒரு நாள் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழமை இந்த ஆலயங்களில் இப்போது 10 நாள் திருவிழா நடைபெற தொடங்கியிருக்கிறது
Facebook



 என்பதுகளில் எமது ஊரின் நாகதம்பிரான் கோவில் தில்லைய பற்று முருகன் கோவில் இருப்பிட்டி பிள்ளையார் கோவில் வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில் களில் திருவிழா காலங்களில் தொலைக்காட்சிகளில் திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டு வந்திருக்கின்றனஇந்த வழமையான நிகழ்ச்சிகளை தவிர ஆங்காங்கே கோவில் விழாக்கள், சிவராத்திரி விழாக்கள் ,பாடசாலை கலை விழாக்கள் என அனைத்திலும் சமய சொற்பொழிவுகள் நடைபெறுவது உண்டு தங்கம்மா அப்பாகுட்டி கைலாசநாத குருக்கள் ,சின்னமணி ஐயா எனப்படும் நாகேந்திர குருக்கள் ,வித்வான் சி. ஆறுமுகம் வித்துவான் பொன் .கனகசபை ,புலவர் ஈழத்துச்சிவானந்தன் போன்றோ,ரின் ஆன்மீக சமய தமிழ் சொற்பொழிவுகள் தமிழை சைவத்தை வளர்க்க பெரிதும் துணை நின்றன. பல ஆலயங்களில் யாழ்ப்பாண பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் கும்மி, கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம் போன்ற தமிழ் மரபுக் கலை நிகழ்ச்சிகளும் நிகழ்ந்திருக்கின்றன. திருவிழாக் காலங்களில் முக்கியமாக தேத் திருவிழாவுக்கு வெளியிடங்களில் இருந்து பக்தர்களுக்கு பக்தி வெறியை ஊட்டக்கூடிய வகையில் மேல தாளங்களுடன் ஆடி பாடி பாடக்கூடிய பஜனை கோஷ்டிகள் வந்து களைகட்டி இருக்கின்றன .சிறுவர்கள் ,இளைஞர்களை மகிழ்வூட்டக்கூடிய வாண வேடிக்கைகாட்சிகள் கூட நடந்திருக்கின்றன.கூடுதலாக கண்ணகி அம்மன் எட்டாம் திருவிழா தினத்தில் வாண வேடிக்கை நிகழ்வதுண்டு .கொம்மாபுட்டி பிள்ளையார் கோவில் பேச்சியம்மன் கோவில் மடத்துவெளி வயலூர் முருகன் கோவில் திருவிழாக்களிலும் வாண வேடிக்கை நிகழ்ந்திருக்கிறது .19 70கள் ஆரம்பத்தில் தான் எது ஊருக்கு மின்சாரம் வந்திருந்தது .அதுவரையிலும் எமது ஊரில் கல்யாண வீடுகள் ,பூபுனித நீராட்டு விழாக்கள் ,குடிபூரல் விழாக்கள் போன்றவற்றில் மட்டும் தான் வகை வகையான வண்ணமயமான ஒளி விளக்குகளை மக்கள் கண்டு களிக்க கூடியதாக இருந்தது .வீடுகளில் பந்தர்கள் போடப்பட்டு மவரை வைக்கப்பட்டு வாசல் தொடக்கம் சிறிய ஒழுங்குகள் வரை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இவை இப்போதாவது தான் நடைபெறும் ஆனால் நிச்சயமாக எமது கோயில்களில் வெளியிடங்களில் இருந்து வருகின்ற ஒளி ஒலி அமைப்பாளர்களினால் தான் விழாக்கள் ஒளிமயமாகும் கோவில்கள் முழுவதும் அலங்கரிக்கப்பட்டு வெளியிலே வீதிகள் பிரம்மாண்டமாக உள்ள மரங்கள் ஒவ்வொரு இடமும் கட்டப்படும் சப்பரங்கள், பூந்தண்டிகைகள், சுவாமி வாகனங்கள் எல்லாம் ஒளி குமிழ்களினால் வகை வகையாக அலங்கரிக்கப்பட்டிருக்கும் -சிறுவர்கள் இளைஞர்களுக்கு இது மிகவும் குதூகலமான சந்தோஷத்தை தந்திருந்தது. மின்சாரமே இல்லாத ஊரில் இப்படி விழாக்கள் நடப்பது அவர்கள் ஆலயத்துக்கு வருவதை கவர்ச்சிகரமாகியது, எமது ஊரைப் பொறுத்தவரையில் இந்த ஒளி ஒலி அமைப்புகளில் முக்கியமாக இரண்டு நிறுவனங்கள் பிரபலமானவை. இவருமே புளியங்கூடலை சேர்ந்தவர்கள் .தம்பிஐயா ,வேலுப்பிள்ளை ஆகிய இவர்களின் பெயர்கள் கூட விழாவிளம்பரங்களில் (நோட்டீஸ்கள்) போடப்பட்டிருக்கும். இதேபோன்று பூந்தண்டிகை, சப்பரம் ,சாத்துப்படி செய்பவர்களின் பெயர்களும் பிரசுரமாவது வழமை.


எல்லா ஆலயங்களிலும் கொடியேற்ற திருவிழா சப்பரத் திருவிழா ,தேர்த்திருவிழா ,தீர்த்த த்திருவிழா, பூங்காவனத் திருவிழா என்பன தான் மக்கள் கூட்டத்தை வரவழைக்கக் கூடியவை ,தவிர ஒவ்வொரு கோவிலும் விசேஷ திருவிழாக்களை கொண்டுள்ளன ,கண்ணகி அம்மன் கோவிலில் தெப்பத் திருவிழா ,கப்பல் திருவிழா என்பவை விசேஷமானவை, ஊரதீவு ஐ யனார் கோவில் திருநாவுக்கரசர் குருபூசை திருவிழா எமது ஊருக்கே பெருமை பேசி நின்றது ,பத்தாம் திருவிழா நாளில் பகலும் இரவும் விடிய விடிய மக்களுக்கு அன்னதானம் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள் ,இந்த விழாவுக்கு என புங்குடுதீவு முழுவதும் உள்ள மக்கள் மாட்டு வண்டிகள் ,உழவு இயந்திரங்களில் கும்பல் கும்பலாக புறப்பட்டு வந்து பகல் இரவு தங்கி நின்று வயிறார உண்டு களைப்பு போக்கி மகிழ்ச்சியோடு வீடு திரும்புவது இன்றும் நினைவித் நிற்கும் .வேட்டை திருவிழா கூட சிறப்பாக நடைபெறும் .உழவு இயந்திரங்களில் எருது .குதிரை .ஆட்டுக்கடா .சிங்கம் போன்ற வாகனங்களில் சுவாமி எழுந்தருளி ஊரில் உள்ள வீதிகள் தோறும் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அருகாமையில் உள்ள ஒரு கோவிலில் வேட்டை ஆடுதல் நடக்கும். வீதிகள் தோறும் மக்கள் தமது வீட்டு வாசல்களில் கும்பம் வைத்து அர்ச்சனை செய்து பிரசாதம் படைத்து அருளை வேண்டி நிற்பர் ,சிறுவர்கள் ,பெரியோர்களுக்கு பிரசாதங்களை வழங்குவது கூட மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும், இப்போது ல்லா ஆலயங்களிலும் எல்லா திருவிழாக்களிலும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. முன்னைய காலத்தில் பெரும்பாலான கோவில்களில் தேர்த்திருவிழாவன்று தான் அன்னதானம் வழங்கப்படும் .மற்றைய திருவிழாக்களில் உபயகாரர்கள் விருப்பப்படி சிலர் அன்னதானத்தை வழங்குவார்கள் .இப்போது இரவு திருவிழாவில் கூட அன்னதானம் வழங்கப் படுகிறது .பழமையான விதிமுறைகள் மாறி இரவில் அரிசி சாதம் மட்டுமன்றி வேறு உணவு வகைகளும் பரிமாறப்படுகின்றன.




திருவிழாக்கள் என்றால் ஒலி ஒளி வேத மந்திரங்கள் ஒலித்தல் கூட்டுப் பிரார்த்தனை பஜனை கோஷ்டிகள் பக்திப்பாடல்கள் ஒலி பரப்புதல் என்று ஊர் முழுவதும் எழுச்சியாக மகிழ்ச்சியாகவே இருக்கும் பல கோயில்களில் நடனம் நாட்டியம் இசை கேளிக்கை பாடல்கள் என்று இருக்க மூன்று கோயில்களில் மட்டும் ஆன்மீக நெறி சிந்தனை பாடல்கள் என்று ஒருவித கட்டுக்கோப்புடன் மிகவும் அமைதியாக திருவிழாக்கள் நடைபெறும் மடத்து வெளி வயலூர் முருகன் பெருங்காடு மாரியம்மன் கோவில் பெருங்காடு சிவன் கோவில் ஆகிய மூன்றும் தான் அவை இங்கு சினிமா பாடல்கள் கேளிக்கை நிகழ்ச்சிகள் சதுர்க்கச்சேரிகள் என்று எதுவும் இடம்பெறாது விழாக்கள் யாவும் ஆன்மீகமயமாக அமைதியாக கட்டுக்கோப்புடன் நடைபெறும் மட வயலூர் முருகன் ஆலயத்தில் நேர கட்டுப்பாட்டின்படி விழா நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் தேர் திருவிழா கூட நல்லூர் கந்தன் திருவிழாவை போன்று காலை 9 மணிக்கு ரதத்தில் சுவாமி எழுந்திருளி இருப்பார் இரவும் பகலும் திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் சரியாக பன்னிரண்டு மணிக்கு முடிவுற்று விடும்




எமது ஊரின் பிரபலங்கள் இந்தியாவில் இருந்து கூட பல கலைஞர்களை அறிஞர்களை பெரும் பொருள் செலவில் அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தி எமது மண்ணுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் ,இந்த வரிசையில் முதலிடத்தில் இன்றும் நிலைத்து நிற்பது பெருங்காடு சிவன் கோவிலில் நடைபெற்ற சீர்காழி கோவிந்தராஜனின் இசைக்கச்சேரி .வடமாகாணம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வந்து ரசித்து சென்றமை குறிப்பிடத்தக்கது .இன்னும் புகழ்பெற்ற கிருபானந்த வாரியார் கி வா ஜெகநாதன் சகிலா நடிகர் சுந்தரராஜன் சீர்காழி சிவசிதம்பரம் தமிழகத்தில் தொலைக்காட்சி புகழ் பாடகர்கள் எமது புலம்பெயர் உறவுகள் போன்றோரின் இயல் இசை நாடக நிகழ்வுகள் உன்னதமானவை


ரத்கம சண்முகம் எனப்படும் பிரபல வர்த்தகர் கொழும்பு மாநகரில் வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்த காலம் தனது வியாபாரத்தில் அமோக வருமானம் ஈட்டியதை முன்னிட்டு பெருங்காடு கி ராஞ்சியம்பதி சிவன் கோவிலுக்கு பிரம்மாண்டமான முறையில் பஞ்ச தள ராஜ கோபுரத்தை கட்டிக் கொடுத்து 1982 மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகத்தினை நிகழ்த்தி வைத்தார் இந்த கும்பாபிஷேக விழாவை சிறப்பிக்க தமிழகத்திலிருந்து பிரபல பாடகர் சீர்காழி கோவிந்தராஜனை அழைத்து வந்திருந்தார் பல்லாயிரக்கணக்கான மக்களின் வருகையுடன் மிக சிறப்பாக நடந்த இந்த நிகழ்வு புங்குடுதீவு மண்ணின் வரலாற்றில் முத்திரை பதித்த ஒன்றாகும் மடத்துவெளி வயலூர் முருகன் ஆலயத்தில் அந்த சமயத்தில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது இதனை கேள்வியுற்ற சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் மறுநாள் காலையில் அந்த ஆலயத்துக்கும் சென்று சில பாடல்களை பக்கவாத்தியங்கள் இன்றி பாடி சிறப்பித்தார் எமது மண்ணில் நடைபெற்ற இது போன்ற மற்றும் ஒரு சரித்திர நிகழ்வு சிலப்பதிகார விழா சிலப்பதிகார விழா கண்ணகி அம்மன் ஆலயங்களில் நடைபெற்று வந்தது விதிமுறை 1954 இல் எந்த ஆலயத்தில் நடத்தலாம் என திரு வுளச்சீட்டு மூலம் தேர்வு நடத்திய போது எமது கண்ணகி அம்மன் ஆலயம் தெரிவு ஆகியது அதன் நிமித்தம் அந்த ஆண்டில் பல தமிழக தாயக அறிஞர்கள் பெரியோர்களை அழைத்து வந்து பிரமாண்டமாக கண்ணகி அம்மன் ஆலயம் ன்றலில் சிலப்பதிகார விழா நடைபெற்றது அந்த விழாவில்தமிழகத்தில் இருந்து வந்திருந்த சிலம்பு செல்வர் மபொசிவஞானம் கலைமகள் ஆசிரியர் கி வா ஜெகநாதன் அச ஞானசம்பந்தர் அ முத்துச்சிவன் ஒன்று பேரறிஞர்களுடன் ஈழத்தில் இருந்து பண்டிதர் கா பொ இரத்தினம் அமைச்சர் நடேச பிள்ளை வித்துவான் பொன் அ கனகசபை வித்துவான் க வேந்தனார் வித்துவான் சி ஆறுமுகம் ஆசிரியர் க சிவராமலிங்கம் போன்ற தமிழ் அறிஞர்களும் சங்கமித்து தமிழ் மனம் பரப்பியிருந்தனர்


மேலும் கலட்டி பிள்ளையார் கோவிலில் தமிழகத்திலிருந்து பிரபலமான கிருபானந்த வாரியார் அவர்களும் பாடகி சகிலா அவர்களும் வந்திருந்து நிகழ்ச்சிகளை வழங்கி சென்றுள்ளார்கள் இலங்கை வந்திருந்த போது பெருங்காடு கந்தசாமி கோவிலுக்கு நடிகர் சுந்தர்ராஜன் அவர்கள் விஷயம் செய்திருந்தார் 2024 கண்ணகி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவில் சீர்காழியின் புத்திரன் சிவசிதம்பரம் அவர்கள் இசை மழை பொழிந்துள்ளார் இந்த விழாவில் சூப்பர் சிங்கர் புகழ் பாடகர்களும் தாயக கலைஞர் கோகுலன் சாந்தன் அவர்களும் சுவிற்சலாந்தில் இருந்து எமது மண்ணின் கலைஞர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள் எமது மண்ணுக்கு சொந்தக்காரர் பிரபலமான எழுச்சி பாடகர் சாந்தன் அவர்களும் கலட்டி பிள்ளையார் கோவில் பாணா விடை சிவன் கோவில் திருவிழாக்களில் பங்கு பற்றி இசை மழை பொழிந்து இருக்கிறார்கள் சாந்தனின் மகன் கோகுலன் அவர்களும் எமது ஊரில் ஆலயங்கள் பலவற்றில் தனது இசைக்கச்சேரிகளை நடத்தி இருக்கின்றார்

எமது ஆலயங்களில் திருவிழா காலங்களில் அல்லது கும்பாபிஷேக விழாக்களில் வேத பாராயணம் நடைபெறுவது சிறப்பு இந்த சிறப்பான வேத பாராயண ஓதலை எமது மண்ணுக்கு சைவ சமயத்தால் பெருமையும் புகழையும் சேர்த்த சின்னமணி ஐயா என அழைக்கப்படும் நாகேந்திர குருக்கள் அவர்கள் செய்து வந்திருக்கிறார் பெரு ங்காடு மாரியம்மன் கோவில் பெருங்காடு சிவன் கோவில் மடத்து வெளி வயலூர் முருகன் கோவில் கண்ணகி அம்மன் கோவில் என்றெல்லாம் இவரது வேத மந்திரம் ஒலிக்காத இடங்களே இல்லைபுங்குடுதீவு மண்ணை பெருமைப்படுத்திய பிரம்மாண்டமான விழாக்கள் மாநாடுகளை இந்த வேளையில் சொல்லாமல் கடந்து போக முடியாது இவை அனைத்தும் சைவத்தையும் தமிழையும் எமது மண்ணும் மக்களும் எவ்வளவு தூரம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு சிலப்பதிகாரவிழா திருக்குறள் மாநாடு சைவத்தமிழ் மாநாடு இலங்கையின் முதலாவது தமிழ் அர்ச்சனை கிராமிய விழா வேதாகம பாடசாலை இத்தனையும் அகில இலங்கை ரீதியில் எமது மண்ணில் நடைபெற்றது என்பது நம்ப முடியாது இருக்கலாம் ஆனால் உண்மை மறைக்க முடியாது மறக்க முடியாது 1968 ஆம் ஆண்டில் இலங்கையில் முதன் முதலாக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது அந்த வகையில் இந்தியாவில் தமிழில் அர்ச்சனை கொள்கை பெற பாடாக இருந்த குன்றக்குடி அடிகளார் எமது ஊருக்கு வந்து கலட்டி பிள்ளையார் கோவிலிலும் பெருங்காடு சிவன் கோவிலிலும் தமிழ் அர்ச்சனையை விழா எடுத்து ஆரம்பித்து வைத்தனர் ஈழத்து சிவானந்தன் வித்துவான் பொன் கனக சபை வித்துவான் சி ஆறுமுகம் போன்றோர் இந்த முயற்சியில் முன்னென்று உழைத்தனர் இங்கேயும் பல பாரிய அளவிலான எதிர்ப்புகள் கிளம்பிய போது பூரண சர்வோதய இயக்கத்தை சேர்ந்த புரட்சியாளர் தளைய சிங்கம் தலைமையில் பொன்னம்பலம் வில்வர த்தினம் போன்ற இளைஞர் கூட்டம் முன்னின்று வந்து சமாதானப்படுத்தி சுமூகமாக நிகழ்வினை முடித்து வைத்தன

ஆறுமுக நாவலரின் எழுச்சி பயணத்தின் தொடராக எமது ஊரில் சைவத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது மூன்று நாட்கள் பெருங்காடு கந்தசாமி கோவில் முன்றலில் நடைபெற்ற இந்த மாநாட்டில் இலங்கையின் அனைத்து சைவ பெரியோர்கள் அறிஞர்கள் அந்தணர்கள் என்று ஆயிரக்கணக்கில் பங்கு சிறப்பித்து இருந்தார்கள்இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பெருஞ்சித்தர்னார் வந்து எமது மண்ணுக்கு புகழ் சேர்த்திருந்தார்
எமது காவலூர் தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் அறிஞருமான பண்டிதர் கா பொஇரத்தினம் அவர்கள் ஸ்தாபித்து இயக்கிக் கொண்டிருந்த திருமறை மன்றம் திருக்குறள் வழியில் பல சேவைகளை ஆற்றி வந்தது இந்த மன்றத்தின் முக்கியஸ்தரான ஈழத் து சிவானந்தன் திருக்குறள் மாநாட்டினை புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் 1970 ஆம் ஆண்டில் நிகழ்த்தி வெற்றி கண்டார் எமது ஊருக்கு பெருமை பெற்று தந்தார்